சொடக்கு பாடலுக்கு இப்படியும் ஆடலாம்: வைரலான ராஜா ராணி 'செம்பா' வீடியோ
சென்னை: சொடக்கு பாடலுக்கு ஆலியா மானசா ஆடும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது.

அந்த படத்தில் வந்த சொடக்கு பாடல் ஏற்கனவே ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில் ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடித்து புகழ் பெற்ற ஆலியா மானசா சொடக்கு பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார்.
அவர் சொடக்கு பாடலுக்கு ஆடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
செம்பாவின் அப்பாவித்தனத்தை பார்த்து பலர் அவருக்கு ரசிகர்களாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications