அடிபட்ட காலில் என்னவொரு ஆட்டம்.. ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் வீடியோ.. குவியும் கமெண்ட்ஸ்!
சென்னை: சின்னத்திரை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நடிகை ஆல்யா மானஸாவின் லேட்டஸ்ட் நடன வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த ஆல்யா மானஸா சமீப காலமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கிய ஆல்யா மானசாவுக்கு காலில் அடிபட்ட நிலையில், நடு ரோட்டில் ஆல்யா மானசா அப்படியொரு ஆட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

ஆல்யா மானசா
இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் ஃபாலோயர்களுடன் பல முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார் சீரியல் நடிகை ஆல்யா மானசா. க்யூட்டான சிரிப்பால் ஏகப்பட்ட இளம் ரசிகர்களை கவர்ந்து வரும் ஆல்யா மானஸாவை பார்க்கவே சீரியல், விளம்பரம் என ஒன்று விடாமல் ரசிகர்கள் ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இனியா
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியலான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த ஆல்யா மானஸா தற்போது சன் டிவியில் இனியாவாக உருமாறி ரசிகர்களை கொள்ளையடித்து வருகிறார். முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் ஆல்யா மானசா ஷூட்டிங் ஸ்பாட்டில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டே இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துள்ளார்.

சாலை விபத்து
கடந்த மாதம் நடிகை ஆல்யா மானசாவுக்கு சாலையில் விபத்து ஏற்பட்ட நிலையில், அவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு சில வாரங்கள் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், தனது கால் முழுவதுமாக குணமாகி விட்டது என்பதை ரசிகர்களுக்கு உணர்த்த இப்படியொரு குத்தாட்ட வீடியோவை ஷேர் செய்திருக்கிறார் ஆல்யா மானசா.

நடுரோட்டில் நடனம்
சீரியல் ஷூட்டிங்கில் பிசியாக உள்ள நடிகை ஆல்யா மானசா தனது ரசிகர்களுக்காக படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த கேப்பில் நடுரோட்டில் சேலை கட்டிக் கொண்டு போட்ட குத்தாட்ட நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தி பாடலுக்கு ஆல்யா மானசா ஆட்டம் போட்ட நிலையில், நல்ல தமிழ் பாடலுக்கு நடனம் ஆடுங்க என ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

சவுண்ட் ஆஃப் பண்ணிட்டா
ஆல்யா மானசாவின் நடன வீடியோவை சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் ரசித்து கமெண்ட் போட்டு வரும் நிலையில், சில நெட்டிசன்கள் வழக்கம் போல அவரது நடனத்தை ட்ரோல் செய்தும் வருகின்றனர். சவுண்ட் ஆஃப் பண்ணிட்டு இந்த வீடியோவை பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
கால் சரியாகிடுச்சா
கால் சரியான நிலையில் தான் இப்படி ரவுண்டு அடிச்சு டான்ஸ் ஆடிய வீடியோவை ஆல்யா மானசா பதிவிட்டு இருக்கிறார். இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த ஆல்யா மானசாவின் தீவிரமான விசிறிகள், அக்கா கால் சரியாகிடுச்சா என நலம் விசாரித்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











