ரகசிய திருமணம் செய்து கொண்ட'ராஜா ராணி'லவ்வர்ஸ்.. உடைந்தது குட்டு.. செம்பா,கார்த்திக் இனி ரியல் ஜோடி!

ஆல்யா - சஞ்சீவ் ஜோடி நிஜத்தில் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

Recommended Video

Watch Video : Vijay TV Fame Alya, Sanjeeve Marriage

சென்னை: ராஜா ராணி நாடகத்தில் நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ரகசிய திருமணம் செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. இதில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்களில் நடன நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே மக்களிடம் அறிமுகமானவர் ஆல்யா. ஆனால், ராஜாராணி சீரியல் அவரை ரசிகர்களின் குடும்பங்களில் ஒருவராக மாற்றியது.

சீரியலில் இருவரும் செம்பா, கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக சேர்ந்து நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்டரி மக்களிடம் அதிகம் ரசிக்கப்பட்டது.

நிஜத்திலும் காதல்

நிஜத்திலும் காதல்

இதனால் நிஜத்திலும் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்துக்கொள்வது, மணிக்கணக்கில் பேசுவது என காதலை வளர்த்தனர். இந்த நடவடிக்கைகளை எல்லாம் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இதனால் சீரியலிலும் அவர்களது நடிப்பு இன்னும் இயல்பாக அமைந்தது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

விஜய் டிவி நடத்திய விழா ஒன்றில் ஆல்யாவுக்கும், சஞ்சீவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்பட்டது. இருவரும் மேடையிலேயே மோதிரம் மாற்றிக் கொண்டனர். இதனால், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகம் இருந்தது.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

ஆனால் அவர்கள் திருமணம் குறித்து வெளிப்படையாக எதையும் பேசவில்லை. ராஜா ராணி சீரியல் முடிந்தகையோடு இருவரும் வெளியூர் சென்றுவிட்டனர். எனவே அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இந்நிலையில் ஆல்யா மானசா - சஞ்சீவ் ரகசிய திருமணம் செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.

மிர்சி செந்தில் அறிவிப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் நாடகத்தில் நடித்து வரும் ஆர்ஜே மிர்சி செந்தில் இதனை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவாக வெளியிட்டுள்ளார். ஆல்யா மானசா - சஞ்சீவ் ஆகியோரது புகைப்படத்தை தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள செந்தில், ‘இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும், பல்லாண்டு அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்' என்றும் வாழ்த்தியுள்ளார்.

ஸ்ரீஜாவுடன் காதல்

ஸ்ரீஜாவுடன் காதல்

செந்திலும் கூட இதே போல் தன்னுடன் சீரியலில் நடித்த ஸ்ரீஜாவைத் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் மதுர மற்றும் சரவணன் மீனாட்சி சீரியலில் சேர்ந்து நடித்த போது காதலில் விழுந்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தத்தையும் விஜய் டிவி பிரம்மாண்டமாக நடத்தியது. திருமணத்திற்குப் பிறகும் சில சீரியல்களில் இருவரும் சேர்ந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்து

வாழ்த்து

ஆல்யா - சஞ்சீவின் திருமண சேதியைக் கேட்டு அவர்களது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் யாருக்கும் தெரியாமல் இப்படி ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களே என்ற வருத்தம் அவர்களுக்கு. இருந்தபோதும் புதுமணத்தம்பதி நீண்ட காலம் நீடூழி வாழ வேண்டும் என சமூகவலைதளப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X