பிக் பாஸ் வீட்டுக்கு போகும் செம்பா: அய்யய்யோ, அப்போ சின்னய்யா என்ன பண்ணுவார்?

By Siva

Recommended Video

Big Boss 3: Alya Manasa: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஆலியா மானசா?- வீடியோ

சென்னை:பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஆலியா மானசா, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா, நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் நடப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா விளையாடாத நாள் அன்று துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Alya Manasa to participate in Bigg Boss 3?

இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ராஜா ராணி சீரியல் புகழ் ஆலியா மானசா, பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா, நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன அச்சுமா, பிக் பாஸ் வீட்டிற்கு போகிறீர்களாமே என்று ரசிகர்கள் அர்ச்சனாவிடம் ட்விட்டரில் கேட்டார்கள். அதற்கு அவரோ, நான் எங்கும் போகவில்லை என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் முன்பு இது போன்று சிலரின் பெயர்கள் அடிபடுவது வழக்கமாகிவிட்டது.

ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு பவர் ஸ்டார் சீனிவாசனின் பெயர் அடிபடும். ஆனால் நிகழ்ச்சியில் அவர் இருக்க மாட்டார். ஆலியா மானசா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டால் சின்னய்யா என்ன செய்வார் என்பதே ராஜா ராணி சீரியல் ரசிகர்களின் கவலையாக உள்ளது.

அவசரப்பட வேண்டாம், ஆலியா மானசா போட்டியாளர் என்று விஜய் டிவி அறிவித்தால் தான் அது உண்மை. அதுவரை இது போன்ற பட்டியல்கள் வந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகை லைலா கலந்து கொள்கிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து அறிந்த அவரோ, நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. எல்லாமே பொய் என்று தெரிவித்தார். தற்போதைக்கு கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார் என்பது மட்டுமே உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X