நடிகர் சித்தார்த்தை காதலிக்கிறேனா?: சிவகார்த்திகேயன் ஹீரோயின் விளக்கம்
மும்பை: சித்தார்த் மல்ஹோத்ராவை காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை கியாரா அத்வானி விளக்கம் அளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர் கியாரா அத்வானி. அவர் கையில் தற்போது 3-4 புதுப்படங்கள் உள்ளன. அவர் ஷாஹித் கபூருடன் சேர்ந்து நடித்த கபிர் சிங் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த கபிர் சிங்.
ரீமேக் என்றாலும் கபிர் சிங் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ட்ரெய்லரை பார்த்து விஜய் தேவரகொண்டாவே பாராட்டியிருந்தார் என்றால் பாருங்களேன்.

கியாரா அத்வானி
கியாரா அத்வானி படங்களில் படுபிசியாக உள்ளார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவரும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக கிடந்தது. அவர்களின் காதலுக்கு பின்னால் பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கியாரா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

எல்லாமே பொய்
நானும், சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலிப்பதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. சும்மா கிளப்பிவிட்டுள்ளார்கள். முன்பெல்லாம் நான் யாரையாவது காதலிக்கிறேன் என்று செய்தி வெளியானால் கவலைப்படுவேன். ஆனால் தற்போது அத்தகைய செய்திகளை பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது என்று தெரிவித்துள்ளார் கியாரா அத்வானி.

நடிகை
படங்களில் நடிக்க வந்துவிட்டாலே காதல் போன்ற கிசுகிசுக்கள் வரும் என்பதை லேட்டாகத் தான் புரிந்து கொண்டேன். இருப்பினும் பிரச்சனை இல்லை. நான் 10ம் வகுப்பு படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். 10ம் வகுப்பு படிக்கும் போது காதல் எதற்கு என்று என் அம்மா திட்டினார்கள். அதனால் அந்த காதல் துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது என்று கியாரா அத்வானி தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்
பாலிவுட் மட்டும் அல்ல தெலுங்கு திரையுலகிலும் கியாரா பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க உள்ள படத்தில் கியாரா நடிக்க உள்ளார். மேலும் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லக்ஷ்மி பாம்ப் படத்திலும் கியாரா நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











