என்னை அறிந்தால்... யுஏவாகவே இருந்தாலும் 5-ம் தேதி ரிலீஸில் மாற்றமில்லை!- தயாரிப்பாளர்
என்னை அறிந்தால் படத்துக்கு ரிவைசிங் கமிட்டியில் யு கிடைக்காவிட்டால், யு ஏ சான்றுடன் வெளியிடவும் தயாராக உள்ளார் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம்.
அஜீத்தின் என்னை அறிந்தால் படம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.
இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழுவில் யு ஏ சான்று கிடைத்துள்ளது. ஆனால் எப்படியாவது யு சான்று பெற்றுவிட தயாரிப்பாளர் முயன்று வருகிறார்.
இதனால் படம் குறித்த தேதியில் வருமா என கேள்வி எழுந்தது மீடியாவில்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், "படத்தை பிப்ரவரி 5-ம் தேதி வெளியிடுவதில் என்று மாற்று யோசனையும் இல்லை. யு சான்று பெற முயன்று வருகிறோம். அது கிடைக்காதபட்சத்தில் யுஏ சான்றுடனே கூட வெளியிடத் தயாராக உள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications












