இன்றும் அதே இளமைத் துடிப்புடன் இருக்கும் அமலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை: ஒவ்வொரு வருடமும் அமலாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அவரது குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடுவதுண்டு. அதே போல் அமலா அக்கினேனியின் 52ஆவது பிறந்தநாளான தேதியான இன்றும் பல ஆச்சரியங்களை அவர்களது குடும்பத்தினர் கொடுக்கவுள்ளனர்.

1980கள் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு பல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலர் அறிமுகமாகி பெரிய பெரிய நட்சத்திரங்களாகவும் மின்னினார்கள். அந்த நட்சத்திரங்களில் ஒருவர் நம் தென்னிந்திய சினிமாவையே தன் அழகாலும், நடிப்பாலும் கவர்ந்து இழுத்தவர் அமலா. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒரு சுற்று சுற்றி வந்தவர்.

Amala Akkineni celebrates 52nd Birthday Today

பெங்காலி பெண்ணாக இருந்த இவரை திரையுலகிற்கு மைதிலி என்னை காதலி திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் டி.ராஜேந்தர். பரதநாட்டியத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்பதால் அமலா சரியான தேர்வாக இருந்தார். பிறகு அவர் நடித்த அக்னி நட்சத்திரம், வேதம் புதிது, மெல்ல திறந்தது கதவு, சத்யா, மௌனம் சம்மதம், வேலைக்காரன் என தொடர்ந்து பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, மோகன், விஜயகாந்த் என் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

1992ஆம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை மணந்தார். இவர்களுக்கு நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி என இரு மகன்கள் உள்ளனர். இதில் நாகா சைதன்யா முன்னணி தெலுங்கு நடிகைகளில் ஒருவரும் நடிகை சமந்தாவின் கணவரும் ஆவர்.

Amala Akkineni celebrates 52nd Birthday Today

ஹைதராபாத்தில் அன்னபூரணா இன்டர்நேஷனல் ஸ்கூல் அஃப் பிலிம் அண்ட் மீடியா எனும் திரைப்பட பள்ளியை அக்கினேனி குடும்பத்தினர் நிறுவியுள்ளனர். இந்த AISFM பள்ளியில் நடிப்பு, எடிட்டிங், இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு போன்ற அனைத்து பிரிவுகளுக்குமான கல்வி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளியின் கல்வி ஆலோசனை குழுவில் ஹேமா மாலினி, கமல்ஹாசன், மணிரத்னம், ஷப்னா ஆஸ்மி மற்றும் பலர் உள்ளனர்.

அமலா விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். விலங்குகள் பாதுகாப்பிற்காக ஹைதராபாத் நகரில் ப்ளூ கிராஸ் அமைப்பை 1992ஆம் ஆண்டில் அக்கினேனி குடும்பத்தினர் ஆரம்பித்துள்ளனர் அதனை இன்று வரை சிறப்பாக பாதுகாத்து வருகின்றனர். இப்படி பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளவர்.

Amala Akkineni celebrates 52nd Birthday Today

அமலா அக்கினேனியின் 52ஆவது பிறந்தநாளான தேதியான இன்று பல ஆச்சரியங்களை அவர்களது குடும்பத்தினர் கொடுக்கவுள்ளனர். ஒவ்வொரு வருடமும் அமலாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அவரது குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடுவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டும் அது நிறைவாக இருக்கும். என்றும் இளமையான அமலாவிற்கு ஃபில்மி பீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

More from Filmibeat

Read more about: amala akkineni
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X