பல வருடங்களுக்கு பிறகு அமலா நடித்த ‘கணம்‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சென்னை : 30 வருடங்களுக்கு பிறகு நடிகை அமலா நடித்த கணம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை அமலா. 1980 மற்றும் 90களில் தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

1992ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அமலா.

நடிகை அமலா

நடிகை அமலா

தமிழில் டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல், பிரபு, மோகன் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார் அமலா. திருமணத்திற்கு பிறகு படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்த நடிகை அமலா, கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான மனம் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

சர்வானாந்த்

சர்வானாந்த்

பல வருடங்களாக நடிக்காமல் இருந்தவர் அமலா இந்தக் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள கணம் படத்தில் அமலா நடித்துள்ளார். இந்தப் படத்தில் சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

இரு மொழிகளில்

இரு மொழிகளில்

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ட்ரீம் வாரியர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கத் திட்டமிட்டது. இப்படத்திற்கு தெலுங்கில் ஒக்கே ஒக்க ஜீவிதம் என்றும், தமிழில் கணம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கணம் படத்தின் சிறப்பே அம்மா பாசத்துக்குள் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்திருப்பது தான். இந்தப் படம் அம்மாவை இழந்தவர்களுக்கு மீண்டும் அம்மாவை ஞாபகப்படுத்தும் படமாக இருக்கும்.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

டைம் டிராவலை வைத்து ஒரு கமர்ஷியல் படத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையைச் சார்ந்த திரைப்படம் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக மெனக்கிடலை படக்குழு அளித்து வருகிறது. பணிகள் முடிந்து செப்டம்பர் 9-ம் தேதி பிரம்மாண்டமாகப் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X