விஜய் - அமலா 'காதல்' முறிவு!
கோடம்பாக்கத்தில் ரொம்ப நாளாக பேசப்பட்டு வந்த சமாச்சாரம் இயக்குநர் விஜய் - அமலா பால் காதல். விஜய் படங்களில் மட்டுமல்ல, விஜய் வீட்டு விசேஷங்களிலும் அமலா பால்தான் ஆஸ்தான நாயகி!
இருவரும் பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கூட வந்தன.
ஆனால் இப்போது இருவரும் பிரிந்துவிட்டார்களாம்.
சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த ராம்சரண் தேஜாவின் திருமணத்துக்கு தனியாகவே கிளம்பிப் போய்விட்டாராம் அமலா. இத்தனைக்கும் அவர் இருந்தது விஜய் இயக்கும் தாண்டவம் படப்பிடிப்பில்!
இன்னொரு பக்கம் விஜய்க்கு அவர் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம். ஆக, விஜய் - அமலா பிரிவு என்பதை செய்தியாக்க இதைவிட வேறென்ன வேண்டும் என்கிறார்கள் கோடம்பாக்கம் ஏரியாவில்!
அமலா பால் தெலுங்கு சினிமாவே கதி என்று கிடப்பதன் பின்னணி கூட, விஜய்யுடனான உறவு முறிவுதான் என்கிறார்கள்.
ஏற்கெனவே ஒரு காதல் விவகாரம்தான் தமன்னாவை கோடம்பாக்கத்துக்கு வரவிடாமல் செய்துவிட்டது. இப்போது அந்தப் பட்டியலில் அமலாவும் சேர்ந்துவிட்டார் போல!


Click it and Unblock the Notifications












