திருமணத்துக்குப் பிறகு அமலா பால் நடிக்க மாட்டார் - விஜய்
சென்னை: திருமணத்துக்குப் பிறகு நடிகை அமலா பால் நடிக்கமாட்டார் என்று இயக்குநர் விஜய் அறிவித்துள்ளார்.
விஜய்க்கும் அமலா பாலுக்கும் வரும் ஜூன் 12-ம் தேதி திருமணம் நடக்கிறது.
ஆனால் இன்னும் இந்தத் தேதியை மட்டும் அறிவிக்காமல் மவுனம் சாதிக்கின்றனர் விஜய்யும் அமலாவும்.

அதற்கு முன் அமலா பால் முடித்துக் கொடுக்க வேண்டிய படங்கள் உள்ளதாலேயே இந்த மவுனம்.
தான் ஒப்பந்தமான அத்தனைப் படங்களையும் மே இறுதிக்குள் முடித்துக் கொடுத்துவிடுவதாக வாக்களித்து மும்முரமாக நடித்து வருகிறார் அமலா.
சரி, திருமணத்துக்கு முன் அமலா பால் நடிப்பாரா? மாட்டாரா? என்ற வழக்கமான கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள விஜய், திருமணத்துக்குப் பிறகு அமலா நடிக்கமாட்டார். அதை எங்கள் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications