சந்து கேப்பில் ப்ரொபோஸ் பண்ண ஆர்யா: நைசா நழுவிய அமலா பால்
சென்னை: ட்விட்டரில் பேச்சு வாக்கில் அமலா பாலுக்கு ப்ரொபோஸ் செய்துள்ளார் ஆர்யா.
இந்த விஷாலுக்கும், ஆர்யாவுக்கும் எப்பொழுது தான் திருமணம் நடக்கும் என்று கோலிவுட்காரர்களும், ரசிகர்களும் அடிக்கடி கேட்கிறார்கள். இந்நிலையில் ஆர்யா அமலா பாலுக்கு ப்ரொபோஸ் செய்துள்ளார்.
ட்விட்டர் மூலம் ப்ரொபோஸ் செய்துள்ளார் ஆர்யா.
நக்கல்
காரை பதிவு செய்வதில் வரி ஏய்ப்பு செய்த அமலா பால் படகு சவாரி செல்வது பற்றி நக்கலாக ட்வீட் போட்டிருந்தார். அதை பார்த்த ஆர்யா சாலை வரியை மிச்சப்படுத்தினால் படகில் போகலாம் என்று கலாய்த்திருந்தார். #JustKidding
டார்ச்சர்
உடம்பை வருத்தி ஓடி, சைக்கிளிங் செய்து நீங்களும் தானே காசை சேமிக்கிறீர்கள் என்று அமலா ஆர்யாவை கலாய்த்தார். #notkidding
காதல்
உனக்காக தான் சேமித்துக் கொண்டிருக்கிறேன். காதல் செய் அமலா...#NotKidding என்று சந்து கேப்பில் ப்ரொபோஸ் செய்துவிட்டார் ஆர்யா.
ட்வீட்
ஆர்யா ப்ரொபோஸ் செய்ததை பார்த்த அமலா மழுப்பலாக பதில் அளித்து கிண்டல் செய்தது போதும் என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











