twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நோ ரெஜிஸ்ட்ரேஷன் - கிரண் பேடியை கூலாக கலாய்த்த அமலாபால்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : நடிகை அமலா பால் மீது கடந்த சில நாட்களாக புதிய கார் வாங்கியதில் அவர் போலி முகவரியைக் கொடுத்து சட்டத்தை மீறி வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

    20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ள அமலா பாலிடம் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு புதுச்சேரி போக்குவரத்துத் துறை செயலருக்கு கவர்னர் கிரண் பேடி உத்தரவிட்டார்.

    அவரைத் தொடர்ந்து மலையாள நடிகர் பகத் பாசிலும் தவறான முகவரி கொடுத்து அவரும் சட்டத்தை மீறியுள்ளார் என்று செய்திகள் வெளியானது.

     பாண்டிச்சேரியில் வரி குறைவு

    பாண்டிச்சேரியில் வரி குறைவு

    அமலாபால், கேரளாவில் வாகனத்தைப் பதிவு செய்யாமல் பாண்டிச்சேரியில் வரி குறைவு என்பதற்காக போலியான முகவரியைக் கொடுத்து பதிவு செய்ததால் கேரள மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரித் தொகை கிடைக்காமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது.

     பதில் சொல்லாத அமலாபால்

    பதில் சொல்லாத அமலாபால்

    இந்தக் குற்றச்சாட்டுக்கு நடிகை அமலா பால் இதுவரை எந்த ஒரு பதிலையும் தெரிவிக்காமல் இருந்தார். சற்று முன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படகு சவாரி செய்யும் படத்தைப் போட்டு #NoRegistration எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஏமாற்றவில்லை

    'படகு சவாரியை பரிந்துரை செய்கிறேன். இதில் பயணிப்பதில் சட்டத்தை மீறும் எந்தக் குற்றச்சாட்டுகளும் வராது... எனது நலன் விரும்பிகளிடம் இரண்டு முறை விசாரித்துவிட்டேன்' என விளையாட்டாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 'நகர வாழ்க்கையிலிருந்தும், தேவையில்லாத யூகங்களிலிருந்தும், ஓட வேண்டும் என சில நேரங்களில் நினைப்பதுண்டு' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

     சான்று கொடுத்துள்ளார்

    சான்று கொடுத்துள்ளார்

    அமலா பால் விவகாரம் தொடர்பாக பாண்டிச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான், அமலாபால் போலி முகவரி தரவில்லை எனக் கூறியுள்ளார். 'அமலா பால் பாண்டிச்சேரி திலாசுபேட்டையில், வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்று தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்.ஐ.சி. பாலிசியும் இந்த முகவரியில் தந்துள்ளார்.

     போலி முகவரி?

    போலி முகவரி?

    போலி முகவரி என்று ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுப்போம். அமலாபால் விவகாரத்தில் தங்கும் இடத்துக்கான சான்று தரப்பட்டுள்ளது. ஒருவர் அளிக்கும் முகவரிச் சான்றுகளை போக்குவரத்துத்துறை பரிசோதனை செய்ய இயலாது.

     ஆதார் இணைக்க தேவையில்லை

    ஆதார் இணைக்க தேவையில்லை

    வாகனம் பதிவு செய்வோர், முகவரியை ஆய்வு செய்ய வேண்டியதில்லை. மத்திய அரசின் சட்டப்படியே செயல்படுகிறோம். வாகன பதிவு முகவரியில் ஆதார் இணைக்க வேண்டும் என போக்குவரத்து சட்டவிதியில் இல்லை.

     தவறு இல்லை

    தவறு இல்லை

    இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாகனம் வாங்கலாம். கர்நாடகத்தில் வாகனம் வாங்கி தற்காலிக பதிவெண் பெற்று, புதுச்சேரியில் நிரந்தர பதிவெண் பெற்றார். இங்கிருந்து வேறு மாநிலத்துக்கு சென்றால், அந்த மாநிலத்தில் பதிவெண் பெற ஓராண்டு கால அவகாசம் உள்ளது.' எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Amala Paul has been accused of tax evading a law on registering a new car. Amala Paul said, "There are no allegations of violating the law and I have inquired to my well-wishers twice."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X