ஆடை இந்தியில் ரீமேக் ஆவது நிச்சயம்…. ஆனால் டைரக்டர் நான் இல்லை-ரத்னகுமார்
Recommended Video
சென்னை: அமலாபால் நடித்த ஆடை திரைப்படம், பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது இந்தப்படம், இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த இயக்குநர் ரத்னகுமார், ஆடை படம் நிச்சயம் இந்தியில் ரீமேக் ஆவது உறுதி, ஆனால் அந்தப் படத்தை நான் இயக்கப்போவதில்லை. ஒருவேளை அந்தப் படத்தை இயக்குவதற்கு என்னை கேட்டால், நான் நிச்சயம் இயக்குவதற்கு தயார் என்று கூறினார்.
மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம்தான் ஆடை. ஆடை படத்தின் கரு, காமினி என்ற தைரியமான பொண்ணு ஒருநாள் காலையில எந்திரிக்கிறப்போ, ஆடை ஏதும் இல்லாம தனித்து விடப்பட்ட ஒரு இடத்தில் இருக்கிறார்.

அந்த பெண்ணை நிர்வாணமாக்கி அப்படி செஞ்சது யாரு, ஏன், என்ன காரணம் என்பதே ஆடை படத்தின் கதையாகும். மேயாதா மான் போல் அழகான படத்தை எடுத்து விட்டு ஆடை படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் ரத்னகுமார். இந்த படம் வெளிவந்து பல விமர்சனங்களை சந்தித்தது.
படம் சொல்ல வந்த விசயத்தை சரியாக சொல்ல வில்லையோ என்ற கேள்வியும் பலரிடம் ஏற்பட்டது. அமலாபால் முதன்முதலில் ஹீரோ இல்லாமல் ஹீரோயினிக்கு மட்டும் முக்கியதுவம் கொடுத்து நடித்த முதல் திரைப்படம் இதுதான்.
இந்த படம் பல விமர்சனங்களை தாண்டி பலராலும் பாரட்டப்பட்டது. பலரும் ஆடை படத்தை தைரியமான முயற்சி என்று கூறினார்கள். தற்போது இயக்குநர் ரத்னகுமார் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆடை படம் இந்தியில் ரீமேக் ஆவது உறுதி என்று கூறியுள்ளார்.
படத்தின் இந்தி உரிமையை முகேஷ் பட் என்பவர் வாங்கியிருக்கிறார். முகேஷ் பட் இந்தியில் ஆசிக் 2, கேங்ஸ்டர், மர்டர் போன்ற பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர்.

நீங்கள் தான் இந்தியில் ஆடை படத்தை இயக்க போகிறீர்களா, என்ற கேள்விக்கு, இந்தியில் ஆடை படத்தை தான் இயக்கவில்லை என்று தெரிவித்தார் ரத்னகுமார். தயாரிப்பு நிறுவன தரப்பில் இருந்து எந்த ஒரு அழைப்பும் இன்று வரை எனக்கு வரவில்லை. ஆனால் அந்த படத்தை இயக்குவதற்கு என்னை கூப்பிட்டால், நான் நிச்சயம் இந்தியில் படத்தை இயக்குவேன், என்று கூறினார் இயக்குநர் ரத்னகுமார்.
மேலும், இந்தி ஆடையை பற்றி இன்னொரு தகவலும் பரவி வருகிறது. இந்தியில் கங்கனா ரனாவத்தை இப்படத்தில் நடிக்க கேட்டுள்ளார்களாம். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. கங்கனா ரனாவத் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் தலைவி படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











