Amala Paul: தனுஷுடன் மீண்டும் இணையும் அமலா பால்... அப்போ இனி கன்டென்ட்டுக்கு பஞ்சமே இருக்காது!

சென்னை: தனுஷ் தற்போது தமிழில் கேப்டன் மில்லர், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவுள்ள தனுஷ், தனது 50வது படத்தை இயக்கவும் முடிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாகவும் அவருடன் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

அதேநேரம் தனுஷின் ஃபேவரைட் நாயகிகளில் ஒருவரான அமலா பாலும் இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷின் D 50-ல் இணையும் அமலா பால்:தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது முடிந்ததும் உடனடியாக சேகர் கம்முலா இயக்கும் படம், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் படம் என இரண்டிலும் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளாராம். அதேபோல், அவரது 50வது படத்தையும் தனுஷே இயக்கி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

 Amala Paul: Actress Amala Paul has joined Dhanushs D 50

பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படமாக D 50 உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள D 50 படப்பிடிப்பு இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் D 50 படத்தில் தனுஷுடன் இணையும் நடிகர்கள், நடிகர்கள் குறித்தும் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின்றன.

அதன்படி, தனுஷுடன் விஷ்ணு விஷால், எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களுடன் தற்போது தனுஷின் ஃபேவரைட்டான அமலா பாலும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டு பாகங்களிலும் தனுஷ், அமலா பால் ஜோடி இணைந்து நடித்திருந்தது.

இருவரது கெமிஸ்ட்ரியும் செம்மையாக ஒர்க் அவுட் ஆனதால், அது தனுஷ் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட காரணமானது எனவும் அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இதனால் மீண்டும் ஜோடி சேராமல் இருந்த தனுஷ் - அமலா பால் கூட்டணி, தற்போது D 50 படத்தில் இணைகிறார்களாம். ஆனால், D 50 படத்தில் தனுஷ் ஜோடியாக அமலா பால் நடிக்கவில்லை என்றும், அவர் சந்தீப் கிஷனுக்கு தான் ஜோடி எனவும் சொல்லப்படுகிறது.

முன்னதாக அபர்ணா பாலமுரளி தான் சந்தீப் கிஷன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதேபோல் துஷாரா விஜயன் தனுஷின் தங்கையாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அமலா பால், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் என மூன்று பேரும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. அதனால், தனுஷின் ஜோடி யார்ரென்று இன்னும் தெரியவில்லை. அதேநேரம், அமலா பால் தனுஷின் ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், அவர் D 50 படத்தில் இணைந்ததே ஹாட் டாப்பிக்காக மாறிவிட்டது.

ஆனாலும், D 50 படத்தில் அமலா பால் இணைந்தது குறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், வட சென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் D 50, தனுஷ் கேரியரில் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X