Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கார் விவகாரம்.. டூர் பிளான்.. எல்லாம் கடந்து மீண்டும் டோலிவுட் பக்கம் தலைகாட்டும் அமலாபால்!
கார் விவகாரம்.. டூர் பிளான்.. எல்லாம் கடந்து மீண்டும் டோலிவுட் பக்கம் தலைகாட்டும் அமலாபால்!
சென்னை : நடிகை அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான திருமண வாழ்க்கை முறிவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் தாண்டி தெலுங்கிலும் இப்போது நடிக்கத் தொடங்கியுள்ளார் அமலாபால்.
ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் இப்போது 'ஆயுஷ்மான் பவ' என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அமலாபால் முஸ்லிம் பெண்ணாக நடிக்கிறார். இந்தப் படம் ஒரு காதல் கதையைக் கொண்டு உருவாகிறதாம்.
அறிமுக இயக்குநர் சரண்தேஜ் 'ஆயுஷ்மான் பவ' படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ளது. இப்படத்தில் இன்னொரு நாயகியாக சினேகா உல்லல் நடிக்கிறார். தெலுங்கில் இந்தப் படத்தின் மூலம் ஒரு இடத்தைப் பிடிக்க நினைக்கிறார் அமலா பால்.
கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கிய அமலா பால், சில நாட்கள் கேரளா, இமயமலைப் பகுதியில் இருக்கும் லடாக் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தார். தனிமையை விரட்ட ஜாலியாக டூர் சென்ற அவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தவிருக்கிறார்.