அபிஜித் தொடையில் அமர்ந்து போஸ் கொடுத்த அமலா பால்.. காட்டுத் தீ போல பரவும் புகைப்படம்!
சென்னை: நடிகரும் அமலா பாலின் சகோதரருமான அபிஜித் பாலின் தொடையில் அமர்ந்தபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது.
தனது சகோதரரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலா பால் அவருடன் எடுத்துக் கொண்ட அட்டகாசமான புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
நடிகை அமலா பால் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

சுற்றும் சர்ச்சைகள்
ஆடை பட நடிகை அமலா பாலை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் சுற்றி வருகின்றன. சில நேரங்களில் செம போல்டாக அதற்கு தனது ஸ்டைலில் பதிலடியும் கொடுத்து வருகிறார் அமலா பால். சில சமயங்களில் அமைதி காத்து அந்த பிரச்சனையை கடந்தும் செல்கிறார்.

கெளதம் மேனனுடன்
ஆடை படத்தின் சர்ச்சைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகை அமலா பாலுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு வெளியான குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி நடித்த ஒரு சின்ன குட்டி ஸ்டோரியில் அங்கம் வகித்து இருந்தார் அமலா பால்.

ரசிகர்களுடன் கனெக்ட்
கோலிவுட் கை விட்டாலும் டோலிவுட் மற்றும் பாலிவுட் பக்கம் சில படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் கமீட் ஆகி உள்ளார் நடிகை அமலா பால். ஆனால், எப்போதுமே தனது ரசிகர்களுடன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் கனெக்ட்டிலேயே இருக்கிறார். அவர் பதிவிடும் போட்டோக்களுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

பர்த்டே பார்ட்டி
கடந்த மே 5ம் தேதி நடிகரும் அமலா பாலின் சகோதரருமான அபிஜித் பால் தனது பிறந்தநாளை கொண்டாடினார். சகோதரரின் பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ செம பார்ட்டி வைத்து நடிகை அமலா பால் கொண்டாடி அசத்தினார். மேலும், சகோதரர் குறித்து உருக்கமான பதிவையும் அமலா பால் பதிவிட்டு வைரலாக்கினார்.

தேவி பட நடிகர்
அமலா பாலை போலவே அவரது சகோதரர் அபிஜித் பாலும் சினிமாவில் நடிகராக கலக்கி வருகிறார். கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு இந்தியன் பிரணாயகதா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர், லைலா ஓ லைலா, பிரபு தேவாவின் தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடை மீது அமர்ந்து
மேலும், தனது சகோதரர் தொடை மீது அமர்ந்தபடி மலை உச்சியில் மேகங்களுக்கு மேலே இருக்கும்படியாக எடுத்த த்ரோபேக் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு ராஜு மற்றும் ராதா என தங்களின் செல்லப் பெயர்களை வைத்துக் கொஞ்சும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











