அமலா பாலுக்கு ஹாட் கிஸ் கொடுத்த பிரித்விராஜ்.. ராஷி கன்னாவை தொடர்ந்து இன்னொரு லிப் லாக் சீனா?
திருவனந்தபுரம்: ஆடுஜீவிதம் ட்ரெய்லர் லீக்கான நிலையில், உடனடியாக எந்தவொரு அறிவிப்புமின்றி நடிகர் பிரித்விராஜ் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அந்த படத்தின் மெர்சலான ட்ரெய்லரை வெளியிட்டார்.
தேசிய விருது இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அதன் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் வியப்பில் வாயடைத்துப் போயுள்ளனர்.

மெலிந்த உடலுடன் பாலைவனத்தில் ஓடாய்த் தேய்ந்த பிரித்விராஜின் ஒரே ஒரு போஸ்டரே ரசிகர்களை பிரம்மிக்க வைத்த நிலையில், அந்த படத்தின் ட்ரெய்லரும் அதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இசையும் ரசிகர்களை போட்டு பிசைந்து எடுத்து வருகிறது.
ஆடுஜீவிதம் எனும் நாவலை அப்படியே படமாக்கி சர்வதேச விருது விழாக்களுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், அங்கே கசிந்த ட்ரெய்லர் தான் திடீரென பிரித்விராஜ் வெளியிட காரணமே என்கின்றனர்.

மனசை உலுக்கும் காட்சிகளுக்கு இடையே நாயகி அமலா பாலுக்கு பிரித்விராஜ் கொடுக்கும் ஹாட் லிப் லாக் காட்சியும் இடம்பெற்ற நிலையில், அந்த காட்சியை மட்டும் கட் செய்து நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் தனியாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.
போல்டாக நடிக்க எப்போதுமே தயங்காத நடிகை அமலா பாலுக்கு பிரித்விராஜ் அடிக்கும் லிப் லாக் காட்சி அந்த ட்ரெய்லரிலேயே வேறலெவல் வெயிட்டேஜ் கொடுக்கிறது என்றும் ஹாலிவுட் தரத்துக்கு படம் இருப்பதை போலவே இந்த சீனும் ஹாலிவுட் படத்தில் வருவதை போல இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்ற்னர்.

பல படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாக முத்தக் காட்சிகளில் நடித்துள்ள பிரித்விராஜ் சமீப காலமாக லிப் லாக் காட்சிகளிலும் நடிப்பதில் எந்தவொரு தயக்கமும் காட்டுவதே இல்லை.
கடைசியாக அந்தாதூன் படத்தின் மலையாள ரீமேக்கான பிரம்மம் படத்திலும் நடிகை ராஷி கன்னாவுக்கு நச்சுன்னு ஒரு லிப் லாக் முத்தத்தை பார்சல் செய்திருப்பார் பிரித்விராஜ்.

முத்தக் காட்சிகளை கடந்து ஆடுஜீவிதம் படத்தில் அவர் போட்டிருக்கும் அர்பணிப்பை பார்த்து மிரண்டுப் போன ரசிகர்கள் இந்த படம் நிச்சயம் ஆஸ்கர் வெல்லும் என்றும் ஏ.ஆர். ரஹ்மான், ரெசுல் பூக்குட்டி என ஆஸ்கர் நாயகர்கள் பணிபுரிந்துள்ள இந்த படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் அதற்கான அறிகுறியை காட்டுவதாகவும் சீக்கிரமே மொத்த படத்தையும் வெளியிடுங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரித்விராஜின் ஆடுஜீவிதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











