இறந்து போன அப்பாவிடம் அமலா பால் கேட்ட 2 வரம்.. நெகிழ்ச்சி பதிவை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்!
சென்னை: அப்பாவை இழந்து வாடும் பிள்ளைகளுக்குத் தான் அந்த கஷ்டம் தெரியும்.
முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நடிகை அமலா பால், பெற்றோருடன் இருக்கும் தனது குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மறைந்த தனது அப்பாவின் நினைவுகளில் வாடி தவிக்கும் அவர் எழுதி உள்ள உருக்கமான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அப்பா மடியில் அமலா பால்
கேரளா, எர்ணாகுளத்தை சேர்ந்த பால் வர்கீஸ் மற்றும் ஆனிஸ் பால் தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் அமலா பால். மறைந்த தனது தந்தை வர்கீஸ் பிறந்தநாள் நினைவாக அவரது மடியில் அமர்ந்து கொண்டு குடும்பத்துடன் இருக்கும் த்ரோபேக் புகைப்படத்தை நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

ரொம்ப மிஸ் பண்றோம்
நீங்க இல்லாம எப்பவுமே நம்ம குடும்பம் ஒரு முழுமையான குடும்பமாக இருக்காது அப்பா என்றும், உங்களை ரொம்பவே மிஸ் பண்றோம் அப்பா எனவும் நடிகை அமலா பால் உருக்கமான பதிவு ஒன்றையும் அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக கொடுத்துள்ளார். குறும்புத்தனமாகவே அமலா பாலை பார்த்த ரசிகர்கள் அவரது இந்த பதிவை பார்த்து கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

இரண்டு ஆசைகள்
இந்த பிரபஞ்சத்தில் எந்த வடிவத்தில் நீங்கள் இப்போ இருக்கிறீங்கன்னு தெரியல, ஆனால், எப்படி எந்த ரூபத்தில் இருந்தாலும், நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கணும்னு நான், அம்மா மற்றும் தம்பி ஆகிய மூன்று பேரும் ஆசைப்படுகிறோம். அந்த ஆசையை நீங்க நிறைவேற்றணும்.

சிக்னல் கொடுங்க
அடுத்த ஆசையாக, எந்த நேரத்தில் ஆவது எங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து சென்றாலோ, அல்லது எந்த காலத்திலாவது எங்களை நீங்கள் கடக்க நேரிட்டாலோ, எங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சிக்னல் கொடுத்து உங்கள் இருப்பை நினைவுப்படுத்துங்க என உருகி எழுதி உள்ளார் அமலா பால்.

ரசிகர்கள் வாழ்த்து
அமலா பால் தனது அப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டுள்ள பதிவை பார்த்த அவரது ரசிகர்கள், அமலா பாலின் அப்பாவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லி வருகின்றனர். மேலும், நிச்சயம் அமலா பாலின் அந்த இரண்டு ஆசைகளும் நிறைவேறும் என்றும் கமெண்ட் பக்கத்தில் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











