»   »  முதல் முறையாக மம்முட்டிக்கு ஜோடியான அமலா பால்!

முதல் முறையாக மம்முட்டிக்கு ஜோடியான அமலா பால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்ட அமலா பால், மீண்டும் முழு வீச்சில் நடிப்பைத் தொடர்கிறார்.

திருமணத்துக்கு பிறகு தமிழில் ‘பசங்க-2' படத்தில் சூர்யாவுடன் நடித்தார். இப்போது மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக நடிக்கப் போகிறார்.

Amala Paul to be paired with Mammootty

படத்தின் பெயர் ‘தோப்பில் ஜோப்பன்' இதில் மம்முட்டி கபடி வீரராக நடிக்கிறார். இந்த படத்தை பிரபல மலையாள டைரக்டர் ஜானி ஆன்டனி இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே மம்முட்டி நடித்த 2 படங்களை இயக்கியுள்ளார். இது இருவரும் இணையும் மூன்றாவது படம்.

அமலாபால், மோகன்லாலுடன் 2 படங்களில் நடித்துள்ளார். மம்முட்டியுடன் நடிக்காமலிருந்த குறை அவருக்கு இப்போதுதான் நீங்கியிருக்கிறது.

English summary
Amala Paul is going to play as Mammootty's heroine for the first time in Malayalam.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil