அடடே அதுக்குள்ள அமலாபாலுக்கு இவ்ளோ வயசாகிடுச்சா.. இயற்கை தந்த அழகிய பரிசைப் பார்த்தீங்களா!

அமலாபால் இன்று தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சென்னை : இயற்கை தந்த அழகிய பிறந்தநாள் பரிசை நடிகை அமலாபால் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிந்து சமவெளி மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை அமலாபால். முதல் படத்தில் சர்ச்சையில் சிக்கினாலும், மைனா படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதனைத் தொடர்ந்து தமிழின் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

Amala paul birthday moment: The last thing she saw before the the day begins is surprising

இயக்குநர் விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலகினார். ஆனால் அந்த திருமணம் தோல்வியடைந்ததால் மீண்டும் நடிப்பிற்கே திரும்பினார்.

இரண்டாவது இன்னிங்சில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து தொடர்ந்து பாராட்டுகளை அள்ளி வருகிறார். அம்மா கணக்கு படத்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு அம்மா, ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தது, இப்போது வெப் சீரிஸ் என அடுத்தடுத்து தனது முடிவுகளால் மக்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

தற்போதும் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்துள்ள அமலாபால் இன்று தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அமலா பால், இயற்கை தனக்கு தந்த அழகிய காட்சியை புகைப்படமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், "எனது 27வது வயதின் கடைசி நாளில், இதுவரை பார்த்திராத அழகிய சூர்ய அஸ்தமனம் இது" என அமலாபால் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில் அமலாபாலுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X