அவனுங்களுக்கு அந்த இடத்துலயே பட்டாச போடணும்.. யானையின் மரணம்.. கொதித்தெழுந்த அமலா பால்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்துக் கொடுத்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அமலா பால் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Recommended Video
கர்ப்பிணியாக இருந்த அந்த யானை உண்ண கொடுத்த அன்னாசி பழத்தை கடிக்க அதன் வாய் பகுதியில் பட்டாசு வெடித்தது. உயிர் போகும் வலியில் துடித்த அந்த யானை, நீரில் இறங்கி அங்கேயே நின்றபடி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த லாக்டவுனில் கேரளாவில் தனது அம்மாவுடன் வசித்து வரும் அமலா பால் இந்த கொடூரமான சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பிரபலங்கள் கண்டனம்
பாலிவுட் பிரபலங்களான அக்ஷய் குமார், ஷ்ரத்தா கபூர் முதல் சின்மயி, சிம்ரன், ராஷி கன்னா, வரலக்ஷ்மி சரத்குமார், பிரணிதா, பூஜா பாட், அட்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த கொடூரமான சம்பவத்துக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இந்த கொடுமையை செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

அந்த இடத்துலயே பட்டாச போடணும்
இந்நிலையில், கேரளாவில் தற்போது வசித்து வரும் நடிகை அமலா பால் நேற்று இரவு, இந்த சம்பவம் குறித்து அறிந்து மனம் பதை பதைத்து போயுள்ளார். கர்மாவை தான் மிகவும் நம்புவதாகவும், அந்த யானைக்கு செய்ததை போலவே அந்த மனிதர்களின் அந்த இடத்திலேயே பட்டாசை போட்டு வெடிக்க வைக்கணும் என கொந்தளித்துள்ளார்.

மன்னித்து விடு சகோதரி
கர்ப்பிணியாக இருந்த அந்த யானையின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மன்னித்து விடு சகோதரியே, நீ அவர்களை மனிதர்கள் என எண்ணி விட்டாய், ஆனால், அவர்கள் மனித உருவில் இருக்கும் அரக்கர்கள் என வன்மையாக சாடியுள்ளார் நடிகை அமலா பால். அவரது கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

கர்மா நிச்சயம் தண்டிக்கும்
அமலா பாலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, நிச்சயம் அந்த கர்ப்பிணி யானையை கொன்றவர்களை கர்மா தண்டிக்கும். அவர்கள் மட்டுமின்றி அவர்களது சந்ததியினரும் இந்த சாபத்தில் இருந்து ஒரு போதும் மீள முடியாமல் அவதி படுவார்கள் என இந்த ரசிகரை போல பலரும் சபித்து வருகின்றனர்.

கதிர் கண்டனம்
பரியேறும் பெருமாள், பிகில், ஜடா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் நடிகர் கதிர், தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் யானையின் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். நாமெல்லாம் மனிதர்கள் என சொல்லிக் கொள்ளவே வெட்கப் படவேண்டும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











