இது எந்த பார்ட்டி? இந்த பக்கம் பீரு.. அந்த பக்கம் யாரு..? அமர்க்கள லுக்கில் நம்ம அமலா பால்!

By

சென்னை: நடிகை அமலா பால், பீர் பாட்டிலுடன் செம ஸ்டைலாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.

நடிகை அமலா பால் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். அடிக்கடி அளவில்லாத புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதை அவர் செய்கிறாரா, அவர் டீம் செய்கிறதா எனத் தெரியவில்லை. ஆனாலும் அள்ள அள்ளக் குறையாத புகைப்படங்களால் நிரம்பி இருக்கிறது அவருடைய இன்ஸ்டா.

பழங்குடியினர் போல

பழங்குடியினர் போல

இதற்கு, ஓடிவந்து கொத்துக் கொத்தாக லைக்ஸ்களை குவித்திருக்கிறார்கள், நெட்டிசன்கள். சமீப காலமாக அவர் விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். திடீரென்று தீம் ஸ்டைல் போட்டோஷூட்டுக்காக காட்டுக்குள் சென்றிருந்தார். பழங்குடியினர் போல டிரெஸ் அணிந்து போட்டோக்களை வெளியிட்டிருந்தார்.

டிஸ்கோ ஸ்டைல்

டிஸ்கோ ஸ்டைல்

அது வைரலானது. பிறகு 80 களின் டிஸ்கோ ஸ்டைலில், ஜிகினா உடை அணிந்து, தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதற்கும் ரசிகர்கள் கொத்துக் கொத்தாக லைக்ஸ்களையும் கமென்ட்களையும் தெரிவித்து இருந்தனர். அவரை அப்படி வர்ணித்திருந்தனர்.

கோவாவில் அமலா

கோவாவில் அமலா

இந்நிலையில், இப்போது ஹாலிடேவுக்காக கோவா சென்றுள்ளார் அமலா பால். பெரும்பாலான நடிகைகள் மாலத்தீவுக்கு சென்றிருக்கும் நிலையில், அமலா கோவா சென்றிருக்கிறார். வழக்கமாக அங்கிருந்து நடிகைகள் பிகினி ஸ்டில்களை வெளியிடுவார்கள். ஆனால், அமலா வித்தியாசமான ஸ்டில்களை வெளியிட்டிக்கிறார்.

பட்வைஸ்ர் பாட்டில்

பட்வைஸ்ர் பாட்டில்

மாடர்ன் லுக்கில் சேரில் ஹாயாக அமர்ந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அருகில் பட்வைசர் பீர் பாட்டில் இரண்டு இருக்கிறது. இதற்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்துள்ளனர். சிலர், கோவா போயிட்டீங்கள்ல, அங்க இப்படித்தான் இருக்கும் என சிலர் கூறியுள்ளனர்.

கலாய் நெட்டிசன்

கலாய் நெட்டிசன்

சிலர், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். உங்க ஸ்டைலே வேற மாதிரி இருக்கே. கலக்குங்க அமலா என கூறியுள்ளார். ஒரு கலாய் நெட்டிசன், கோவா போயும் பட்வைசர் தானா? எனக் கேட்டுள்ளார். என்ன உடம்பு குறைஞ்ச மாதிரி இருக்கு, பாத்துக்கோங்க அமலா என்று சிலர் அக்கறையாக கேட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகின்றன.

Recommended Video

ஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ!
ஆடையின்றி நடித்து யின்றி நடித்து

ஆடையின்றி நடித்து யின்றி நடித்து

அமலா பால், தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது, அதோ அந்த பறவை போல ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

பாவ்னீந்தர் சிங்

பாவ்னீந்தர் சிங்

இயக்குநர், ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். இது தமிழ், மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தனது காதலரான பாவ்னீந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X