முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர அமலா பாலுக்கு அனுமதி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!

By Sivam

சென்னை: முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலாபாலுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை அமலா பால் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றவர். இந்நிலையில் மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங் அமலாபாலுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

 Amala paul can file a defamation suit against her ex-boyfriend: Chennai high court

அமலாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பாவ்னிந்தர் சிங் சிறிது நேரத்தில் அவற்றை நீக்கிவிட்டார். இந்த நிலையில் நடிகை அமலாபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் முன்னாள் நண்பர் பாவ்னிந்தர் சிங் தன்னுடன் எடுத்த புகைப்படங்களையும் தனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறி வெளியிட்ட புகைப்படங்களையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மேலும் அவர் மீது சிவில் அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் சிவில் அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X