twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமலாபால் கொடுத்தது போலி முகவரிதான் - மோட்டார் வாகனத்துறை அறிக்கை

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    ஆடை வாங்க காசு இல்லையாம்மா: கலாய்த்தவர்களுக்கு டாப்ஸி நெத்தியடி- வீடியோ

    புதுச்சேரி : நடிகை அமலாபால் மற்றும் மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஆகியோர் புதுச்சேரியில் வசிப்பதாகப் பொய்யான முகவரியைக் கொடுத்து கார் பதிவு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த வழக்கில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான், அமலாபால் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்திருந்தார். கேரள அரசு அமலாபால் வரி ஏய்ப்பு செய்ததை நிரூபித்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் கூறியிருந்தார்.

    Amala paul car case changed to crime branch

    இந்நிலையில், புதுச்சேரி சென்று விசாரித்த மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் அந்த விலாசம் போலியானவை என அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து இந்த வழக்கை க்ரைம் பிராஞ்ச் போலீஸுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டி.ஜி.பி லோக்நாத் பெஹ்ரா. இனிமேல் அமலா பால் கார் பதிவு வழக்கை க்ரைம் பிராஞ்ச் போலீசார் விசாரிப்பார்கள்.

    இந்த விவகாரத்தில் அமலாபால் தான் எந்த வரி ஏய்ப்பும் செய்யவில்லை அதனால் கேரளாவில் வரி கட்டமாட்டேன் எனக் கூறியிருந்தார். ஃபகத் பாசில் கேரளாவில் வரி கட்ட ஒப்புக்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    There is a new twist in the Amala Paul tax violation case. The motor vehicle officials who visited Puducherry have reported that the address is fake. Now, DGP Loknath Behra has ordered the case to be transferred to the Crime Branch police.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X