சபாஷ் சரியான போட்டி.. தனுஷுடன் மோதும் அமலா பால்.. அடேங்கப்பா.. இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலையே!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் அடுத்த வாரம் ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் மிரட்டலாக உள்ளதாக கூறி வருகின்றனர்.
நிச்சயம் இந்த படம் தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனுஷுக்கு போட்டியாக நடிகை அமலா பால் களத்தில் குதித்து இருப்பது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2வது திருமணம் செய்துக் கொண்டு குழந்தையையும் பெற்றெடுத்த அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள படமும் தனுஷ் படத்துடன் போட்டியாக வெளியாக போகிறது.
தனுஷின் ராயன்: ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, டிடி நீலகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ப. பாண்டி திரைப்படத்தை தனுஷ் இயக்கி நடித்திருந்தார். அந்த படம் விமர்சன ரீதியாகவும் லாபகரமான படமாகவும் அமைந்தது. அதன் பின்னர் ஸ்ரீகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த படம் அதன் பின்னர் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்நிலையில், புதுப்பேட்டை, வடசென்னை ஸ்டைலில் ஒரு மிரட்டலான படமாக ராயன் படத்தை இயக்கி நடித்திருக்கிறார் தனுஷ்.
எதையும் ரிவீல் பண்ணல: ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ராயன் படத்தில் தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான டிரெய்லரில் படத்தின் கதையை கொஞ்சம் கூட வெளிப்படுத்தாமல் இயக்குநர் தனுஷ் ஆக்ஷன் பிரியர்களான ரசிகர்களை டார்கெட் செய்து மட்டுமே டிரெய்லர் கட் செய்திருக்கிறார்.
தனுஷுடன் மோதும் அமலா பால்: தனுஷின் ராயன் படம் வெளியாகும் ஜூலை 26ம் தேதி அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள 'லெவல் கிராஸ்' திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தை த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தயாரித்துள்ளார். ராயன் திரைப்படத்துக்கு தமிழ்நாட்டில் இந்த படம் பெரிய போட்டியாக இல்லை என்றாலும், கேரளாவில் டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
தனுஷ் ஜோடி: தனுஷுடன் இணைந்து நடிகை அமலா பால் வேலையில்லா பட்டதாரி 1 மற்றும் 2 படங்களில் நடித்துள்ளார். கர்ப்பமாவதற்கு முன்பாக அமலா பால் நடித்த இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நேற்று கேரளாவில் உள்ள செயின்ட் ஆல்பர்ட் கல்லூரியில் மாணவர்களை சந்தித்து படத்தை அமலா பால் ப்ரமோட் செய்த காட்சிகளை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











