அமலா பால் வீட்டில் மட்டுமில்லை.. ஏ.எல். விஜய் வீட்டிலும் இன்னைக்கு விசேஷம்தான்.. என்ன தெரியுமா?

சென்னை: நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட நிலையில், முதன் முதலாக ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு குழந்தையின் பெயரையும் அறிவித்துள்ளார்.

நடிகை அமலா பாலின் வீட்டில் மட்டுமின்றி அவரது முன்னாள் கணவர் ஏ.எல். விஜய் வீட்டிலும் இன்று விசேஷம் தான். ஏனென்றால் ஏ.எல். விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Amala Paul AL Vijay birthday Thalaiva Mission Chapter 1

தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனுக்கு மகனாக பிறந்த ஏ.எல். விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். அஜித்தின் கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ.எல். விஜய் இந்த ஆண்டு அருண் விஜய், எமி ஜாக்சனை வைத்து மிஷன் சாப்டர் 1 படத்தையும் இயக்கியுள்ளார்.

ஏ.எல். விஜய் பிறந்தநாள்: ஏ.எல். அழகப்பன் மற்றும் வள்ளியம்மை தம்பதியினருக்கு 1979ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி சென்னையில் பிறந்தார். இன்று தனது 45வது பிறந்தநாளை ஏ.எல். விஜய் கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மிஷன் சாப்டர் 1 படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தற்போது ஏ.எல். விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

Amala Paul AL Vijay birthday Thalaiva Mission Chapter 1

அஜித், விஜய் படங்கள்: கிரீடம் படத்தின் மூலம் 2007ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமான ஏ.எல். விஜய் அடுத்து பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பின்னர் விஜய்யை வைத்து தலைவா படத்தையும் இயக்கினார். தலைவா படம் சொதப்பிய பின்னர் முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்புகளை பெரியளவில் தவற விட்டுவிட்டார் ஏ.எல். விஜய். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளும் அவரை சில ஆண்டுகள் முடக்கி விட்டன.

அமலா பாலுடன் விவாகரத்து: தெய்வத் திருமகள் படத்தில் அமலா பால் நடித்த நிலையில், அவருக்கும் ஏ.எல். விஜய்க்கும் காதல் மலர்ந்தது. தலைவா படத்தில் அமலா பாலை ஹீரோயினாக்கி அழகு பார்த்தார். ஆனால், திடீரென இருவருக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடித்த நிலையில், அமலா பாலை விவாகரத்து செய்து பிரிந்தார் ஏ.எல். விஜய்.

திருமணமும் குழந்தையும்: அமலா பால் மற்றும் ஏ.எல். விஜய் இருவரும் 2014ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். பின்னர் இருவரும் 2017ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். ஆனால், இருவருக்கும் குழந்தை ஏதும் பிறக்கவில்லை. ஐஸ்வர்யா என்பவரை 2019ம் ஆண்டு ஏ.எல். விஜய் திருமணம் செய்துக் கொண்டார். 2020ம் ஆண்டு ஏ.எல். விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்தது.

Amala Paul AL Vijay birthday Thalaiva Mission Chapter 1

அமலா பாலுக்கு ஆண் குழந்தை: ஜகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்ட அமலா பாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இலை என பெயர் சூட்டிய நிலையில், நேற்று குழந்தையுடன் வீட்டுக்கு வரும் வீடியோவை அமலா பால் வெளியிட்டுள்ளார்.

ஏ.எல். விஜய் வீட்டில் விசேஷம்: அமலா பால் வீட்டில் ஒரு பக்கம் புதிய குழந்தை வந்த கொண்டாட்டங்கள் அரங்கேறி வரும் நிலையில், ஏ.எல். விஜய் தனது பிறந்தநாளை தனது இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கிய மிஷன் சாப்டர் 1 படம் சரியாக போகவில்லை. அடுத்து அவர் எந்த படத்தை இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. பிறந்தநாளில் புதிய படத்துக்கான அறிவிப்பு வெளியாகிறதா என்பதை பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X