'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
நடிகை அமலா பால் ஒன்இந்தியாவுக்கு அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: கிசுகிசுக்கள் தான் தன்னை சரியான பாதையில் வழி நடத்துவதாக, ஒன்இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா பால். மைனா படத்தின் மூலம் பிரபலமாகி, விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
அர்விந்தசாமியுடன் அவர் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் கடந்த வியாழனன்று திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகை அமலா பால் ஒன்இந்தியாவுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க...
'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஒரு நல்ல கலகலப்பான குடும்பப்படம். நேரெதிர் குணாதசியங்கள் கொண்ட இரண்டு பேரை இணைத்து வைக்க குழந்தைகள் செய்யும் சேட்டைகளே படத்தின் கதை. படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் 6 வயது குழந்தைக்கு தாயாக நடித்துள்ளேன்.

படத்தில் அம்மா வேட்த்தில் நடித்திருக்கும் நீங்கள், அதிக கவர்ச்சி காட்டியிருப்பது ஏன்?
வழக்கமான அம்மா கேரக்டராக இல்லாமல், இதை வித்தியாசமாக செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அர்விந்த்சாமி காஸ்ட்டியூம்ஸ் ரொம்ப லோக்கலாக இருக்கும். அதனால் எனது ஆடைகள் ரிச்சாக இருக்க வேண்டும் என்பதற்காக மாடர்ன் டிரஸ்களை பயன்படுத்தியுள்ளோம்.
கையில் எத்தனை படங்கள் இருக்கின்றன?
இப்போதைக்கு ராட்சசன் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அவள் ஒரு பறவை போல படமும் இறுதி கட்டத்தில் இருக்கிறுது. மலையாளத்தில் ஆடுஜீவிதம் படத்தில் நடிக்கிறேன். இது தவிர இந்திப் படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளேன். அதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.
உங்களை பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வந்துகொண்டே இருக்கிறதே?
(சிரிக்கிறார்) நான் கிசுகிசுக்கள் மீது பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. பொதுவாக இரண்டு விதமாக கிசுகிசுக்கள் வரும். ஒன்று நாம் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என கூறுவார்கள். மற்றொன்று நாம் சரியான பாதையில் செல்கிறோம் என சொல்வார்கள். இப்போது நல்ல பாதையில் போவதாக தான் கிசுகிசுக்கள் வருகின்றன. அதனால் அதை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.

அதே நேரத்தில் நாம் செய்வது தவறு என கூறும் போது, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், என் தவறை நான் திருத்திக்கொள்வேன். சும்மா வேடிக்கையாக வரும் கிசுகிசுக்களை நானும் அப்படியே எடுத்துக்கொள்வேன்.
சமூக வளைதளங்களில் பிசியாக இருக்கிறீர்களா?
நான் எப்போதாவது தான் சமூக வலைதளங்களின் பக்கம் வருவேன். சமீபத்தில் என் யோகா போஸ் ஒன்றை பதிவிட்டேன். மிகவும் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட போஸ் என்பதால் அதை நான் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டேன். நன்றி


Click it and Unblock the Notifications











