காதலர் சொன்ன 'அந்த' ஒரு வார்த்தைக்காக ஆடை படத்தில் நடித்த அமலா பால்
சென்னை: காதலர் சொன்ன ஒரு வார்த்தையால் அமலா ஆடை படத்தில் நடித்துள்ளார்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள ஆடை படம் ஜூலை 19ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் தான் ஒருவரை காதலிப்பதாக அமலா பால் தெரிவித்துள்ளார்.

மேலும் காதலரை பற்றி ஆஹா, ஓஹோன்னு பேசியுள்ளார் அவர். அவர் தன் காதலரை பற்றி பேசியதை பார்த்த ரசிகர்கள் யாருய்யா அந்த ஆளு அவரை பார்க்க வேண்டும் என்று எங்களுக்கே ஆசையாக உள்ளதே என்று தெரிவித்துள்ளனர்.
காதலிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ள அமலா பால் காதலரின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த காதலரை பார்க்க ரசிகர்கள் ஆசைப்படும் அளவுக்கு அமலா பால் என்ன சொன்னார் என்று தெரியாதவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளவும்.
காதலர் பற்றி அமலா பால் கூறியதாவது,
நான் ஆடை படத்தின் ஸ்க்ரிப்ட்டை படித்த உடன் முதலில் அவரிடம் தான் கூறினேன். அவர் கதையை கேட்டுவிட்டு நீ இதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்றார். இந்த படத்தில் நீ நடிப்பதாக இருந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் 100 சதவீதம் ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும். அதன் பிறகு அது பற்றி யோசிக்கக் கூடாது என்றார்.
தாயால் மட்டுமே எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்த முடியும். அதை அவர் செய்கிறார். அவர் எனக்காக வேலையை விட்டுவிட்டு ஆதரவாக உள்ளார். எனக்கு நடிப்பு பிடிக்கும் என்பதால் உறுதுணையாக உள்ளார்.
நான் நடித்த சில படங்களை அவர் பார்த்துவிட்டு உன் நடிப்பு அந்த அளவுக்கு நன்றாக இல்லை என்றார். அவரின் நேர்மையான விமர்சனங்களை கேட்ட பிறகே நான் வலுவான கதை கொண்ட ஸ்க்ரிப்டுகளை தேடி ஆடை படத்தை தேர்வு செய்து நடித்தேன் என்றார் அமலா பால்.
அமலா பால் ஆடை படத்தில் நடிக்க காதலர் ஊக்குவித்துள்ளார், அவர் நிர்வாணமாக நடிக்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். எதை செய்தாலும் குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு செய்வதாக அமலா பால் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











