அமலாபால் வெளியிட்ட புதிய போட்டோ.. டபுள் மீனிங்கில் மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

அமலாபால் வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்திற்கு மோசமாக கமெண்ட்டுகள் கிடைத்து வருகிறது.

சென்னை: அமலா பால் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை நெட்டிசன்கள் மிகவும் மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

விவாகரத்திற்குப் பிறகு தீவிரமாக படங்களில் நடித்து வரும் அமலாபால், அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இத்தகைய புகைப்படங்கள் கடுமையான விமர்சனங்களைத் தந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து அதே மாதிரியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

மஞ்சள் உடை புகைப்படம்:

மஞ்சள் உடை புகைப்படம்:

அந்தவகையில் நேற்று ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில் மஞ்சள் நிற மேல் சட்டை அவர் அணிந்திருக்கிறார். கூடவே, "நான் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என கூறுகிறார்கள். அதனால் நான் இன்று மாங்காயாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

ஆபாச கமெண்டுகள்:

ஆபாச கமெண்டுகள்:

இந்த புகைப்படத்தை இதுவரை ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் பார்த்துள்ளனர். சுமார் 600க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். ஆனால், அவற்றில் பலர் இரட்டை அர்த்தம்படும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர். பலரது கமெண்டுகள் மிகவும் ஆபாசமாக இருக்கிறது.

அமைதியோ அமைதி:

அமைதியோ அமைதி:

ஆனால், அத்தகைய கமெண்ட்டுகளுக்கு பதிலடி தரும் விதமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட புகைப்படத்தை நீக்கவோ செய்யாமல் வழக்கம் போல் அமைதியாகவே இருக்கிறார் அமலாபால். ஆனால், இப்படியே தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களாக வெளியிட்டு வந்தால், அவரது இமேஜே மாறி விடும் என்பது தான் ரசிகர்கள் கவலையாக இருக்கிறது.

கதாபாத்திர தேர்வு:

கதாபாத்திர தேர்வு:

தற்போது தமிழில் அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். சமீபகாலமாக தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் அமலா பால், சமூகவலைதளங்களிலும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளலாம் என்பது தான் அவரது நலம் விரும்பிகளின் கருத்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X