அமலா பால் இரண்டாவது திருமணம் இன்னைக்கு நடக்கலயாம்.. அது முடிஞ்சு பல மாதங்கள் ஆகுதாமே! #AmalaPaul

சென்னை: நடிகை அமலா பால் சில மாதங்களுக்கு முன்பே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Amala Paul Live in Relationship | singer Bhavninder Singh | Web Series

நடிகை அமலா பால் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான மைனா படம் பெரும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார் அமலா பால். விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்த படங்களும் பெரும் வெற்றி பெற்றது.

விஜயுடன் திருமணம்

விஜயுடன் திருமணம்

இயக்குநர் ஏஎல் விஜயின் இயக்கத்தில் தெய்வ திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார் அமலா பால். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து சினிமாவில் பீக்கில் இருந்தபோதே இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

விவாகரத்து

விவாகரத்து

திருமணத்திற்கு பிறகு சில காலம் குடும்பத்தினர் விருப்பப்படி நடிக்காமல் இருந்த அமலா பால், பின்னர் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில ஆண்டுகளிலேளே விவாகரத்து செய்து கொண்டனர். கடந்த ஆண்டு இயக்குநர் ஏஎல் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

நெருக்கமான போட்டோக்கள்

நெருக்கமான போட்டோக்கள்

இந்நிலையில் தான் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அமலா பால் தனது காதலர் பாவ்னிந்தர் சிங்குடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியானது.

ஆனால் இன்று நடக்கலயாமே

ஆனால் இன்று நடக்கலயாமே

இந்நிலையில் நடிகை அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் திருமணம் செய்துக் கொண்ட போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அமலா பால் இன்று திருமணம் செய்து கொள்ளவில்லை.

டிவிட்டர் ட்ரென்ட்டாகி

அவர் பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து சில மாதங்கள் ஆகிறது என்றும் கூறப்படுகிறது. இதனிடையே டிவிட்டரில் #BhavninderSingh, #AmalaPaul ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன. இருவரின் திருமண போட்டோக்களையும் ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கல்யாணம் ஆயிடுச்சு

அமலா பாலின் திருமண போட்டோக்களை பார்த்த இந்த நெட்டிசன் என்னடா அமலாபால்க்கு கல்யாணம் ஆயிடுச்சு என கவலைப் பட்டுள்ளார். இருவரின் திருமண போட்டோக்களம் வைரலாகி வரும் நிலையில் இருவருமே தங்களின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X