Amala paul: அமலா பால் ஓணம் ஸ்பெஷல்.. ப்பா..புள்ள லட்டு மாதிரி இருக்கே!
சென்னை: நடிகை அமலா பாலுக்கு ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு இலை என்று அமலா பால் பெயர் வைத்து இருக்கிறார். குழந்தை பிறந்த பின்னும் இணையத்தில் கணவரோடு இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வந்த அமலா பால், ஓணம் பண்டிகையொட்டி தனது குழந்தையின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். இந்த படத்திற்கு முன் அவர் ஒரு தமிழ் படத்தில் நடித்த போதும், சிந்து சமவெளி திரைப்படம் தான் அவருக்கு நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் அமலா பால் ஏற்றிருந்த கதாபாத்திரம் சர்ச்சைக்குரியதாக இருந்த போது, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதில் தைரியமாக நடித்திருந்தார். . இதன் காரணமாக, பலரது கவனத்துக்கு உள்ளான அமலா பாலுக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

அடுத்தடுத்த படத்தில்: இதைத்தொடர்ந்து, இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் கொஞ்சமும் சம்மந்தமே இல்லாமல் கண்களால் பேசி நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் மூலம் நடிகர் விஜயின் தலைவா படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படத்திற்கு பின் விக்ரம்,தனுஷ்,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததார்.
முதல் திருமணம்: சினிமாவில் பிஸியாக நடித்து வந்த அமலா பால், இயக்குநர் ஏ.எல் விஜயை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்தனர். இவர்கள் இருவரும் பிரித்ததற்கான காரணத்தை சொல்லாத நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால், விவகாரத்திற்கு பின் அமலா பால் ஒரு சில படத்தில் நடித்து வந்தார்.

இரண்டாம் திருமணம்: இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரோமன் கத்தோலிக்க முறையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ் உள்ளிட்டவைகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்த அமலா பால், திருமணமான சில நாட்களிலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால், அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா என்ற சர்ச்சை எழுந்தது.

க்யூட் செல்லம்: இதைத்தொடர்ந்து, நடிகை அமலா பாலுக்கு ஜூன் 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த போட்டோவை அமலா பால் இணையத்தில் வெளியிட்டு குழந்தைக்கு இலை (ILAI) என பெயர் வைத்து உள்ளதாக அறிவித்தார். குழந்தை பிறப்பிற்கு பிறகு கணவருடன் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வந்த அமலா பால், முதன் முறையாக தனது குழந்தையின் போட்டோவை வெளியிட்டு ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள பாரம்பரிய உடையில் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, கணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ஃபேன்ஸ், வாவ், செம க்யூட் புள்ள லட்டு மாதிரி இருக்கு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இணையத்தில் இந்த போட்டோ டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











