For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Aadai film: துளி கூட ஆபாசம் இல்லை.. ஆடை இல்லாததும் தெரியலை.. சபாஷ் அமலா பால்!

|
சாதி மதத்தை பற்றி ஆவேசப்பட்ட அமலா பால் | Amala paul angry speech

சென்னை: நடிகை அமலாபால் ஆடை படத்தில் நடித்திருக்கவே தேவையில்லை என்று ரொம்ப சிம்பிளா நாம் சொல்லிவிட்டு போய்விடலாம். ஆனால், இத்தனை அருமையான நல்ல கதையை வைத்துக்கொண்டு நடிகைக்குத் தவிக்கும் இயக்குநருக்கு ஒரு நடிகை வேண்டாமா?

அவர்தான் அமலா ...பால் ஒரு நடிகையாக கைக்கொடுத்து நடித்து ஆடையின்றி, அதே சமயம் ஆபாசம் இன்றி நடித்து இருக்கும் அமலாபாலை நடிகை என்கிற ரீதியில் எவ்வளவு பாராட்டினாலும் தகும். சுதந்திரம், தைரியம் என்று பேசும் பெண்கள் கட்டாயம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றுதான் விமர்சனங்கள் வருகின்றன.

உங்கள் வீட்டில் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுடன் குடுமபமாக உட்கார்ந்து இந்த படத்தை பார்க்கலாம் என்பதும் பலரின் கருத்தாக இருக்கிறது.

ஆண்களே தொட்டதில்லைன்னு சொன்னியேமா மீரா.. இது என்ன? பார்க்கும் போதே கிக்கு ஏறுதே!

நிகர் என்று

நிகர் என்று

ஆணுக்குப் பெண் நிகர் இங்கே என்று கும்மியடி பாப்பா என்று பாரதியார் சொன்னது போல, பெண் சுதந்திரம் என்பது இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றிய கதைதான் இந்த ஆடை படம். தன் பெண்ணுக்கு தேவையான அளவு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்கிறார் அம்மா. ஆணுக்கு எல்லா விதத்திலும் சமமான பெண்ணாக வளர்ந்து இருக்கும் அமலா பால் எல்லா விதத்திலும் பெண்ணுக்கு தேவையான சுதந்திரத்தோடு வலம் வந்திருக்கும் கதைதான் ஆடை படம்.

சர்ச்சையான கதை

சர்ச்சையான கதை

கம்பி மேல நடப்பது போன்ற ஒரு கிரிட்டிக்கலான கதையை மிக தைரியமாக கையாண்டு எந்த விதத்திலும் ஆபாசம் துளியும் தலை காட்டாதபடி காமிரா கோணத்தில் கதையை கொண்டு போயிருக்கும் இயக்குநர் ரத்னகுமார்,பாவம் இந்த படத்தில்நடிக்க வைக்க எத்தனை நடிகைகளை அணுகி அவர்கள் நோ சொன்னார்களோ... ஆனால்,அமலா பாலுக்கு அடித்தது யோகம்.

விஜய் கார்த்திக்

விஜய் கார்த்திக்

சினிமாட்டோகிராபர் விஜய் கார்த்திக் மிக கவனமாக காமிராவைக் கையாண்ட விதம், வியக்கும்படி இருந்ததாக பேசுகிறார்கள். ஒரு பெரிய பில்டிங்கில் அமலாபால் மாட்டிக் கொள்கிறார். அந்த பில்டிங்கில் அமலாபால் ஆடையின்றி, அங்கும் இங்கும் அடைக்கலம் புகுந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டும். நிச்சயம் இதில் அமலாபால் ஆடை இன்றிதான் நடித்திருக்க வேண்டும் என்று எல்லாருமே வாதிட்டாலும், எந்த இடத்தில் நீங்கள் அவர் உடம்பை பார்த்தீர்கள் என்று விவாதமே வைக்கலாம்.

,இடது புறம்

,இடது புறம்

வலது புறம்,இடது புறம் என்று அமலாவின் உடல் தெரிந்தாலும், முக்கியமாக ஆடையின்றி அமலாவின் உடலை இந்த இடத்தில் பார்த்தேன் என்று எவராலும் சொல்வ முடியாதபடி சினிமாட்டோ கிராபர் காமிராவை கையாள ரொம்பவே சிரமப்பட்டு இருக்கிறார் என்று புகழாரம் சூட்டுகிறார்கள். மிக முக்கியமாக ஒரு காட்சியில் முகம் காட்டும் கண்ணாடி உடைந்துவிட, உடைந்த அத்தனை பாக கண்ணாடி சில்லுகளில் நமது உடலின் எதோ ஒரு பாகம் அந்த கண்ணாடிகளை கடந்து செல்லும்போது தெரியும். அந்த இடத்திலும் மிக கவனமாக காமிராவைக் கையாண்டு இருக்கிறார் என்று விஜய் கார்த்திக்கை புகழ்கிறார்கள்.

கதை பிறந்த விதம்

கதை பிறந்த விதம்

திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு காலத்தில் பெண்கள் மேலாடை அணிவதற்கு வரி விதிக்கப்பட்டு இருந்ததாம். அந்த வரியை நீக்கி தங்களது உரிமையைப் பெற ஒரு பெண் உண்மையாகவே தனது மார்பகத்தை அறுத்தெறிந்து பெண்களின் உரிமையை நிலை நாட்டினாராம். அதை அடிப்படையாக வைத்து இன்றைக்கும் பெண்கள் சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை காண்பிக்கும் படம்தான் ஆடை.

மிக துணிச்சலுடன் இந்த படத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டு நடித்த அமலா பாலுக்கு ஒரு சல்யூட்!

English summary
Actress Amalapal's costume is not necessarily in the movie. But don't you want an actress who has such a good story and a slipping director?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more