கல்யாண போட்டோக்களை போட்டு.. அவசர அவசரமாக நீக்கிய பாவ்னிந்தர் சிங்.. என்ன காரணம்?!

சென்னை: நடிகை அமலா பால் திருமணம் செய்துள்ள பாவ்னிந்தர் சிங், தனது திருமண போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வேகத்தில் நீக்கியிருக்கிறார்.

Recommended Video

Amala Paul Live in Relationship | singer Bhavninder Singh | Web Series

நடிகை அமலா பால் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதுதான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. இருவரின் திருமண போட்டோக்களும் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகிறது.

நடிகை அமலா பால் ஏற்கனவே இயக்குநர் ஏஎல் விஜயை திருமணம் செய்து விவாகரத்தானவர். தொடர்ந்து முன்னணி நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.

சப்பைக்கட்டு கட்டினார்

சப்பைக்கட்டு கட்டினார்

போதாகுறைக்கு இயக்குநர் ஏஎல் விஜயின் அப்பாவான, ஏஎல் அழகப்பன் அமலா பால் விவகாரத்துக்கு காரணம் நடிகர் தனுஷ் தான் என்று கூறினார். ஆனால் இல்லவே இல்லை, அவர் என்னுடைய வெல்விஷர் என்று சப்பைக் கட்டு கட்டினார் அமலா பால்.

ஆடை படம்

ஆடை படம்

திருமணம், விவாகரத்து என ஒரு பக்கம் பிரச்சனைகள் இருந்தாலும் மறு பக்கம் சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வமாக இருந்தார் அமலா பால். தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அமலா பால், ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் நடித்தார்.

நீக்கம்

நீக்கம்

இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் நடிகை அமலா பால். அதன் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார் நடிகை அமலா பால். மேலும் அவர் நடிப்பில் உருவான அதோ அந்த பறவை போல படமும் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

2வது திருமணம்

2வது திருமணம்

நடிகை அமலா பால் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் உள்ளார். இந்நிலையில் நடிகை அமலா பால் வெப் சீரிஸிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் தனக்கு ஒரு காதலர் இருப்பதாகவும் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என்றும் பேட்டிகளில் கூறி வந்தார்.

போட்டோக்கள் வெளியீடு

போட்டோக்கள் வெளியீடு

அதன்படி தனது காதலர் பாவ்னிந்தர் சிங்கை திடீரென திருமணம் செய்திருக்கிறார் அமலா பால். அவரது திருமண போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இருவரும் சில மாதங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமலா பாலின் கணவர் பாவ்னிந்தர் சிங், தங்களின் திருமண போட்டோக்களை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

நீக்கப்பட்ட போட்டோக்கள்

நீக்கப்பட்ட போட்டோக்கள்

ஆனால் வெளியிட்ட சற்று நேரத்திலேயே தங்களின் திருமண போட்டோக்களை நீக்கி விட்டார் பாவ்னிந்தர் சிங். அமலா பாலுக்கு தெரியாமல் பாவ்னிந்தர் சிங் திருமண போட்டோக்களை வெளியிட்டதாக தெரிகிறது. ஆனால் திருமணம் ஆனதை ரகசியமாக வைத்திருக்க நினைக்கும் அமலா பால் அதனை வெளியிடக் கூடாது என கூறியதால் பாவ்னிந்தர் சிங் போட்டோக்களை நீக்ககியதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X