வீணாக ஸ்பாயில் ஆன தனுஷ் இமேஜ்.. இந்த பிரபலத்துடன் தான் அமலா பால் லிவ்வின்னில் இருக்காராம்?
சென்னை: நடிகர் தனுஷால் தான் அமலா பால் - விஜய் விவாகரத்து நேர்ந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது, அமலா பால் காதலித்து வருபவர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
இயக்குநர் ஏ.எல். விஜய்க்கும், அமலா பாலுக்கும் தெய்வத்திருமகள் படப்பிடிப்பின் போது மலர்ந்த காதல், 2014ம் ஆண்டு திருமணத்தில் கொண்டு வந்து சேர்த்தது.
திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே, இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு, 2017ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

தனுஷ் காரணம்
நடிகை அமலா பால் உடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் இணைந்து நடித்த நடிகர் தனுஷின் இமேஜ், அமலா பால் விவாகரத்து விவகாரத்தில் டோட்டலாக டேமேஜ் ஆனது. எல்லாவற்றுக்கும் மேலாக, இயக்குநர் ஏ.எல். விஜய்யின் தந்தை மற்றும் தயாரிப்பாளரான ஏ.எல். அழகப்பன் தனுஷ் தான் காரணம் என வெளிப்படையாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நலம் விரும்பி
அதுவரை பொறுத்திருந்த நடிகை அமலா பால், தனுஷ் பெயர் பகிரங்கமாக வெளியான நிலையில், அதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நடிகர் தனுஷ் தனது நலம் விரும்பியும் நண்பரும் ஆவார். அவர் மீது, வீண் பழி சுமத்த வேண்டாம் என எச்சரித்து இருந்தார். ஆனால், அப்போது கூட தனது புதிய காதலர் குறித்த தகவலை அமலா பால் வெளியிடவில்லை.

ஓரங்கட்டப்பட்டார்
மேயாத மான் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் ஒட்டுத் துணியின்றி பல காட்சிகளில் நிர்வாணமாக அமலா பால் நடித்து இருந்தார். அந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் இருந்து அமலா பால் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

லிவ் இன்
இந்நிலையில், நடிகை அமலா பால், மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. பவிந்தர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு பெண்ணை கட்டிப் பிடித்து காதலி என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இருப்பது அமலா பால் தான் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

காதலிக்கிறேன்
ஆடை படத்தின் புரொமோஷனின் போது நடிகை அமலா பால், தான் ஒருவரை காதலிப்பதாகவும், தன்னை தாய் பார்த்துக் கொள்வதை போல அவர் பார்த்துக் கொள்கிறார் என்றும், தனக்காக வேலை வெட்டியை விட்டு விட்டு, தன்னை கவனித்துக் கொள்வதிலேயே அக்கறை செலுத்துகிறார். விரைவில் எனது லவ் குறித்து அறிவிப்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்போ ரிலீஸ்
அமலா பால் நடிப்பில் ஆடை படத்திற்கு பிறகு உருவான அதோ அந்த பறவை போல படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. தமிழ் சினிமாவில் சான்ஸ் இல்லைன்னா என்ன? டோலிவுட், பாலிவுட் இருக்கே என அமலா பால் பிசியாக சுற்றி வருகிறார். அதோ அந்த பறவை எப்போ ரிலீசாகும், தனது காதலர் குறித்து அமலா பால் அதிகாரப்பூர்வமாக எப்போது அறிவிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











