லவ்வரா நடிக்கிறாராம்... நடிகர் தனுஷ் படத்தில் மீண்டும் அமலா பால்

By

சென்னை: நடிகர் தனுஷ் படத்தின் ரீமேக்கில் நடிகை அமலா பால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய படம் அசுரன். தனுஷ் வயதான கேரக்டரிலும் இளவயது தோற்றத்திலும் நடிப்பில் மிரட்டியிருந்தார்.

அவர் மனைவியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மற்றும் டீஜே, கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரிய வெற்றி

பெரிய வெற்றி

இந்தப் படம் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்தது. அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. நடிகர் தனுஷுக்கு முதல் முறையாக, 100 கோடி வசூலை ஈட்டித் தந்த படம், இதுதான்.

வெற்றிவிழா

வெற்றிவிழா

இந்தப் படம் 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இது கடந்த சில நாட்களுக்கு முன் நூறு நாட்களை கடந்ததை அடுத்து ரசிகர்கள் ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடினர். இதன் வெற்றிவிழா சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் நடந்தது. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

தெலுங்கில் நாரப்பா

தெலுங்கில் நாரப்பா

இந்தப் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். ஶ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இதில் மஞ்சுவாரியர் கேரக்டரில் பிரியாமணி நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணுவுடன் இணைந்து சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் ஆந்திராவில் நடந்து வந்தது.

திருநெல்வேலி

திருநெல்வேலி

இந்நிலையில், இதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக திருநெல்வேலியில் நடந்துவருகிறது. இதற்கிடையே இந்தப் படத்தில் நடிகை அமலா பாலும் இணைந்துள்ளார். இவர், தனுஷை காதலிப்பவராக நடித்த அம்மு அபிராமி கேரக்டரில் நடிக்க உள்ளார். அவர், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2, அவர் தயாரித்த அம்மா கணக்கு ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்போது அவரது அசுரன் ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X