ப்பா.. என்னா கவர்ச்சி.. அமலாபாலை சன்னிலியோனுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்!

சென்னை: ஆடை பட பர்ஸ்ட் லுக்கைப் பார்த்து விட்டு, சன்னி லியோனுடன் ஒப்பிட்டு அமலாபாலை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேயாத மான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். இவரது இரண்டாவது படமான ஆடையில் அமலாபால் நாயகியாக நடித்து வருகிறார். நாயகியை மையப்படுத்திய கதைக்களம் இப்படம்.

வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார். அதில், ஆடை ஏதும் இல்லாமல் வெறும் காகிதங்களை உடலில் சுற்றியபடி அமலாபால் போஸ் கொடுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமலாபாலின் போட்டோ:

அமலாபாலின் போட்டோ:

அமலாபாலின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அழுதபடி, உடலில் காயங்களுடன் அந்தப் புகைப்படத்தில் அமலாபால் தோற்றமளித்தார். செல்போன்களில் இலவசம் என்று வரும் குறுந்தகவல்களையும் அதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்தும் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.

சமூகவலைதளங்களில் விமர்சனம்:

சமூகவலைதளங்களில் விமர்சனம்:

அமலாபாலின் இந்த கவர்ச்சியான புகைப்படம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு அவர் கவர்ச்சியாக நடித்திருப்பதாகவும், வேறு எந்த தமிழ் நடிகையும் இதற்கு முன்பு இவ்வளவு கவர்ச்சியாக தோன்றியது இல்லை என்றும் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

சன்னி லியோன்:

சன்னி லியோன்:

இவ்வளவு கவர்ச்சியாக நடித்துள்ளதால் அவர்தான் அடுத்த சன்னிலியோன் என்றும் டிவிட்டரில் சிலர் மோசமான கருத்துக்களைப் பதிவிட்டு உள்ளார்கள். ஆனால், இதையெல்லாம் அமலாபால் பெரிய விசயமாக எடுத்துக் கொள்ளவில்லை.

பாராட்டுவார்கள்:

பாராட்டுவார்கள்:

ஆடை படத்தில் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், கதை பிடித்ததால் கவர்ச்சிக்கு சம்மதித்ததாக அவர் கூறியுள்ளார். அதோடு, ‘‘எனது முதல் தோற்றத்தை பார்த்து விமர்சிப்பவர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டுவார்கள். அந்த ஆடையுடன் நான் ஏன் அப்படி நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும்'' என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X