அட்ராசக்க, அமலா பாலுக்கு அடித்தது ஜாக்பாட்

By Siva

Recommended Video

அமலா பாலுக்கு அடித்த ஜாக்பாட்...!!

திருவனந்தபுரம்: அமலா பாலுக்கு அடித்த ஜாக்பாட் பற்றி மல்லுவுட் ஹீரோயின்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் பிளஸியின் அடுத்த படமான ஆடுஜீவிதத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலா பால். பிளஸி படத்தில் நடிக்க பல நடிகைகள் விரும்பிய நிலையில் அமலா பாலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் இது.

ஹீரோ

ஹீரோ

ஆடுஜீவிதம் படத்தில் ப்ரித்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். முன்னதாக இந்த படம் கிடப்பில் போடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஒரு படத்திற்காக ப்ரிதிவிராஜிடம் 2 ஆண்டு கால்ஷீட் இல்லை என்று கூறப்பட்டது.

ஷூட்டிங்

ஷூட்டிங்

படம் பற்றி ஏதேதோ கூறப்பட்ட நிலையில் ஆடுஜீவிதம் அமர்க்களமாக துவங்க உள்ளது. விருது பெற்ற இயக்குனரின் படத்தில் நடிப்பதை நினைத்து அமலா பால் மகிழ்ச்சியில் உள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தேசிய விருது பெற்ற பிளஸியின் ஆடுஜீவிதம் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. பென்யமினின் கிளாசிக் நாவலை அப்படியே 3டியில் படமாக்குகிறார்கள். இந்த படத்திற்காக ப்ரித்விராஜ் 2 ஆண்டுகள் ஒதுக்கியுள்ளார் என்கிறார் அமலா.

இசை

இசை

ஆடுஜீவிதம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 25 ஆண்டுகள் கழித்து அவர் மலையாள படத்திற்கு இசையமைக்கிறார். ஆஸ்கர் விருது வாங்கிய ரசூல் பூக்குட்டி படத்தின் சவுண்டு என்ஜினியராக பணிபுரிகிறார்.

அழகிய கதை

அழகிய கதை

ஆடுஜீவிதம் படத்திற்காக பிளஸியுடன் பணியாற்றுகிறேன். படத்தின் கதை மிகவும் அழகானது என்று ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். மாஸ்டர்கள் ஒன்றுகூடும் இந்த படம் திரையிலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமலா பால் நம்புகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X