நேர்கொண்ட பார்வை சூப்பர் ஹிட்டாகும் என நம்பும் அமலா பால்: ஏன் தெரியுமோ?
சென்னை: அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று அமலா பால் நம்புகிறார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை கொண்டாடித் தீர்க்க அஜித் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்திற்காக அமலா பாலும் காத்திருக்கிறார்.

அஜித்
அஜித் படம் குறித்து அமலா பால் கூறியதாவது, நேர்கொண்ட பார்வை படம் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று நம்புகிறேன். அதை பார்த்து பெரிய ஹீரோக்கள் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்யட்டும். அஜித் சார் திரையில் முக்கியமான விஷயங்கள் பற்றி பேசினால் மக்கள் நிச்சயம் கேட்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஆடை
ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்ததால் அமலா பாலுக்கு சில பட வாய்ப்புகள் கை நழுவிப் போய்யுள்ளது. இதை பார்த்து முதலில் வருத்தப்பட்ட அவர் போனால் போகட்டும், எனக்கென்று எது இருக்கோ அதை யாராலும் தட்டிப்பறிக்கவும் முடியாது, தடுக்கவும் முடியாது என்று தைரியமாக உள்ளார்.

பொன்னியின் செல்வன்
அமலா பாலின் தைரியம் வீண் போகவலில்லை. இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமலா பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆடை சர்ச்சையை வைத்து ஒரு நடிகையை ஒதுக்கும் ஆள் நான் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் மணிரத்னம்.

தயாரிப்பாளர்
இத்தனை ஆண்டுகளாக நடிகையாக மட்டுமே இருந்த அமலா பால் கேடவர் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள அதோ அந்த பறவை போல படத்திலும் நடித்துள்ளார். ஆடை பட போஸ்டர் வெளியானதில் இருந்து இன்று வரை அமலா பால் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆடை படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் அமலா நிம்மதி அடைந்துள்ளார். தன்னை பாராட்டி போடப்படும் ட்வீட்டுகளை ரீட்வீட் செய்வதுடன் நன்றியும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் அவர்.


Click it and Unblock the Notifications











