'லைஃப் இஸ் ஷார்ட் நண்பா..' வழு வழு உடையில் வானம் பார்த்தபடி அமலா பால்.. வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: வழு வழு உடையில் வானம் பார்த்தபடி நடிகை அமலா பால் வெளியிட்டிருக்கும் புதிய போட்டோ ஸ்டில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக, நடிகை அமலா பால், அளவில்லாத மகிழ்ச்சியில் இருக்கிறார் போலிருக்கிறது.

தனது புதிய போட்டோஷூட் ஸ்டில்களை தினமும் ஒன்றிரண்டு என வெளியிட்டு வருகிறார், ஆர்வமாக.

வரவேற்பை பெற்றன

வரவேற்பை பெற்றன

அதில் சில படங்கள் கிளாமராக இருக்கிறது. இதற்கு, ஓடிவந்து குத்துக் குத்தாக லைக்ஸ்களை குவித்திருக்கிறார்கள், நெட்டிசன்கள். அழகை வர்ணித்து வரும் கமென்ட்களுக்கும் பஞ்சமில்லை. சிலர் ஏன் இப்படி? என்று கிண்டலும் அடித்திருந்தனர். அதற்கு முன் அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்களும் நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றிருந்தன.

ஆடையின்றி நடித்து

ஆடையின்றி நடித்து

நடிகை அமலா பால், தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது, அதோ அந்த பறவை போல, மலையாளத்தில் ஆடுஜீவிதம் படங்களில் நடித்து வருகிறார்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

தெலுங்கிலும் நடித்து வரும் அமலா பால், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து, கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. அமலா பாலும் ஏ.எல்.விஜய்யும் பிரிவதற்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று இயக்குனர் விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இதை அமலா மறுத்திருந்தார்.

திருமண போட்டோ

திருமண போட்டோ

இந்நிலையில், நடிகை அமலா பாலும் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கும் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. திருமணப் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார், பவ்னிந்தர் சிங். அதனுடன் வெட்டிங் த்ரோபேக் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இந்த திருமண தகவல் பொய் என்று கூறியிருந்தார் அமலா பால்.

கொள்ளை அழகு ஸ்டில்ஸ்

கொள்ளை அழகு ஸ்டில்ஸ்

இதற்கிடையே இப்போது வழு வழு உடையில் வானம் பார்த்துக்கொண்டு ஸ்டைலாக நிற்கும் புதிய ஸ்டில்களை வெளியிட்டிருக்கிறார், அமலா பால். பார்க்கும்போதே பச்சக்கென்று பற்றிக் கொள்கிறது கொள்ளை அழகு ஸ்டில்ஸ்! அதில் சட்டையை அங்கும் இங்குமாக ஒதுக்கிவிட்டு அமலா நிற்கிற ஸ்டைலே அலாதியாக இருக்கிறது.

மழையும் நானும்

மழையும் நானும்

அவர் சிரித்துக் கொண்டும் கேஷூவலாக நிற்கும் இந்த புகைப்படங்கள் கொரோனாவை விட வேகமாக வைரலாகி வருகின்றன. நல்ல கம்பெனி என்று கேப்ஷன் கொடுத்துள்ள அமலா, மழையும் நானும், இயற்கை, இயற்கை பேபி என்பது உள்பட சில ஹேஷ்டேக்குகளை கொடுத்திருக்கிறார். இதற்கும் ரசிகர்கள் கண்டபடி கமென்ட்களை வீசி வருகின்றனர். ஒருவர், லைஃப் இஸ் ஷார்ட் நண்பா, ஆல்வேஸ் பி ஹேப்பி' என்று கூறியுள்ளார்.

மாலைநேர வானவில்

மாலைநேர வானவில்

இன்னொருவர், நீங்கள் அழகான நடிகை. உங்கள் வாழ்க்கைக்கு ஒரு கம்பெனி வந்தால் நல்லது என்று கூறியுள்ளார். நல்ல போட்டோஷூட். மாலைநேர வானவில் மாதிரி அப்படி அழகு என்று சிலர் வர்ணித்துள்ளனர். நிலவு வானத்தைப் பார்க்கிறது என்று கவிதையாகக் கூறியிருக்கிறார் ஒரு நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X