நீ என் தந்தை... நீ என் அம்மா… அமலா பால் தனது சகோதரருக்கு எழுதிய உருக்கமான பதிவு !
சென்னை : நடிகை அமலா பால் தனது சகோதரர் அபிஜித் பாலுக்கு உருக்கமான பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
அந்த பிறந்த நாள் வாழ்த்துக் கடிதத்தில் அமலா பால் மிகவும் உணர்ச்சி மிகுதியாக பலவற்றை கூறியுள்ளார்.
தற்போது அந்த கடிதத்திற்கு லைக்குகள் குவித்து அனைவரும் அமலா பாலை பாராட்டி வருகின்றனர்.

உருக்கமான கடிதம்
அமலா பாலின் சகோதரர் அபிஜித் மே 5 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாடும் தனது அன்பு சகோதரனுக்காக இதயப்பூர்வமான ஒரு கடித்தை அமலா பால் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படத்துடன் தற்போது பகிர்ந்துள்ளார்.

நீ என் அம்மா
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் ஜித்தெட்டான், நீ என் சகோதரன் என்று சொல்வதை விட ஒரு உயர்வான இடத்தில் நீ இருக்கிறாய். எனக்கு அப்பாவின் அன்பு கிடைக்காத நேரத்தில் நீ என் தந்தையாக இருந்து இருக்கிறார். என் விருப்பத்தை அம்மா புரிந்து கொள்ள முடியாத போது கூட நீ என் அம்மாவாக இருந்து அனைத்தையும் புரிந்து கொண்டாய்.

சிரிப்பை தந்தாய்
நான் மிகவும் சோர்ந்த நேரத்தில் என்னை மிகவும் என்னை பாதுகாப்பானவளாக உணர வைத்து இருக்கிறாய். எங்கள் வாழ்க்கையின் இருண்ட காலங்களில் நீ என்னை மகிழ்வித்த விதத்தையும், நான் பயத்தில் திரும்பிப் பார்க்கும்போது, நீ சிரிப்பை மட்டுமே எனக்கு தந்து இருக்கிறாய்.
Recommended Video

சிறந்த சகோதரன்
இதுநாள் வரை நீ என்னை ஒரு முறை கூட குறை கூறவில்லை, என்னைக் கேள்வி கேட்கவில்லை, என்னைப் பற்றி மோசமாக உணர வைத்ததும் இல்லை. என்னை வழிநடத்தியது நீ, என் வீடு, என் வேர்கள், எனது குடும்பம், எனது ஆசீர்வாதம், எனது சிறந்த நண்பன், எனது சகோதரர் மற்றும் எனது தனிப்பட்ட ஜோய் ட்ரிபியானி. ஜிது நீ நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன் என்று தனது சகோதரருக்கு உருக்கமாக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் அமலா பால்.


Click it and Unblock the Notifications











