அமலா பாலா.. அனாபெல்லா பேயா.. முன்ன எலும்புக்கூடு.. இப்போ இத்தனை பல்ப்.. ஒரு மார்க்கமாவே ஆயிட்டாரே!

சென்னை: நடிகை அமலா பால் பல பல்புகளை கையில் ஏந்தியடி படுபயங்கரமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

மனதுக்கு விருப்பமான மனிதர்கள் தரும் ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார் அமலா பால்.

ஓஷோ, சத்குரு என சமீப காலமாக ஆன்மிக சிந்தனையிலும் அதிக நாட்டம் கொண்டவராக மாறி வருகிறார்.

சர்ச்சை நாயகி

சர்ச்சை நாயகி

சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் உடலுறவு கொள்ளும் மருமகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலா பால், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் முழு நிர்வாணமாக நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். யார் என்ன சொன்னாலும், தன் மனதுக்கு பட்டதை செய்து வருகிறார்.

அம்மாதான் எல்லாம்

அம்மாதான் எல்லாம்

இயக்குநர் ஏ.எல் விஜய்யுடன் நடைபெற்ற திருமணம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது கேரளாவில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார் நடிகை அமலா பால். தனது சுக துக்கங்களை எல்லாம் தனது தாய் தான் பார்த்துக் கொள்கிறார் என்றும், அவரை போல உலகில் யாரும் இல்லை என்று அன்னையர் தினத்தை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றையும் போட்டிருந்தார்.

அமைதியை தேடி

அமைதியை தேடி

காதல், திருமணம், பிரிவு, சர்ச்சை, தோல்வி என பல தொல்லைகள் தன்னை சூழ்ந்தாலும், மனம் போன போக்கில் சென்று வரும் நடிகை அமலா பால், சில காலமாக மன அமைதியை தேடி, ஓஷோவின் சிந்தனைகள், சத்குருவின் புத்தகங்கள் மற்றும் தேவாலயங்களுக்கு சென்று ஆன்மிக சிந்தனைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

எலும்புக்கூடு தத்துவம்

எலும்புக்கூடு தத்துவம்

பெண்கள் கர்ப்பம் ஆவது குறித்தும், ஆண்களுக்கு அதில் எந்த வலியும் வேதனையும் இல்லை என்றும் சில நாட்களுக்கு முன்னதாக அமலா பால் பதிவிட்ட பதிவு மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில், தற்போது எலும்புக்கூடு புகைப்படத்துடன் அடங்கிய தத்துவ மெசேஜ் ஒன்றையும் அமலா பால் நேற்று ஷேர் செய்திருந்தார்.

அனபெல்லாவா

அனபெல்லாவா

இந்நிலையில், தற்போது நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல எரியும் பல்புகளை கையில் ஏந்தியபடி படு பயங்கரமான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அழகான அமலா பால் ஏன் இப்படி அனபெல் படத்தில் வரும் பேய் போல மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஷாக்கடிக்க போகுது

ஷாக்கடிக்க போகுது

சில தீவிரமான அமலா பால் ரசிகர்கள், பார்த்து மேடம் ஷாக் அடிக்கப் போது, மின்சாரத்துடன் இப்படி விளையாடாதீங்க என்று பதட்டத்துடன் அட்வைஸும் செய்து வருகின்றனர். சிலர், வாவ் அம்மு நீங்க தான் என் வாழ்க்கையின் ஒளி விளக்கு, நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ரெடி என்றும் கமெண்ட்டுகளை போட்டு கடுப்பேற்றி வருகின்றனர்.

கிறுக்குத்தனமா

கிறுக்குத்தனமா

எப்ப பார்த்தாலும், கிறுக்குத்தனமா எதையாவது போட வேண்டியது. அதையும் சிலர் ரசித்து கமெண்ட் போட ஜொள்ளு விட்டுக் கொண்டு லைனில் க்யூ கட்டி வரானுங்க என அமலா பால் என்றும் பாராமல் வெளுத்து வாங்கி வருகின்றனர் சில நெட்டிசன்கள். அவருக்கு இந்த லைனில் என்ன வேலை என்று தான் தெரியவில்லை.

அயன் லேடி

அயன் லேடி

பல தடைகள் வந்தாலும், அதை எல்லாம் சின்ன புன்னகையால் கடந்து சாதனை படைத்து வரும் கோலிவுட்டின் அயன் லேடி நீங்க,, இந்த காலத்து பெண்களுக்கான சரியான இன்ஸ்பிரேஷன் நீங்க.. நிச்சயம் இந்த லாக்டவுனுக்கு பிறகு சினிமா உலகில் ஒரு கலக்கு கலக்குவீங்க என சில பெண் ரசிகைகளும் அமலா பாலுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X