பாலியல் தொல்லை.. நண்பர் மீதே அதிரடி புகார் அளித்த அமலா பால்.. கைது செய்த போலீஸார்

சென்னை: நடிகை அமலா பாலுக்கு அவரது நண்பர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை அமலா பாலுக்கு அவரது நண்பர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலாபால் அளித்த புகாரின் பேரில் ஜெய்ப்பூரை சேர்ந்த ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் தத் என்கிற பூவியை விழுப்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இரண்டாவது திருமண சர்ச்சை

இரண்டாவது திருமண சர்ச்சை

அமலா பாலுக்கும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பவ்நிந்தர் சிங்குக்கும் இரண்டாவது திருமணம் நடைபெற்றதை போல புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அந்த நபருடன் கேஷுவலாக எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுகிறார் என அமலா பால் அப்போதே பரபரப்பை கிளப்பி இருந்தார்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள வீட்டில் நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை அமலாபால் அளித்த புகாரின் பேரில் ஜெய்ப்பூரை சேர்ந்த ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங்கை விழுப்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

நெருக்கமான புகைப்படங்கள்

நெருக்கமான புகைப்படங்கள்

இயக்குநர் ஏ.எல். விஜய் உடன் விவாகரத்தான நிலையில், நடிகை அமலா பால் மற்ரும் பவ்நிந்தர் சிங் இருவரும் நெருக்கமாக பல இடங்களுக்கு சுற்றித் திரிந்த புகைப்படங்களும் ஒருவரை ஒருவர் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்தது போன்ற திருமண போட்டோஷூட் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

எப்படி பழக்கம்

எப்படி பழக்கம்

சினிமா தயாரிப்புத் தொழிலில் ஏற்பட்ட நட்பு காரணமாக நண்பர் பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி, அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து திரைப்பட நிறுவனம தொடங்கியதாகவும், பின்பு 2018 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரியமுதலியார்சாவடியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தொழில் செய்ததாகவும், அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டல் விடுத்து எதிரியும் அவரது உறவினர்களும் நடிகையை ஏமாற்றி, அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து, நடிகையின் பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்து நடிகைக்கு மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் தொழில் ரீதியாகவும் துன்புறுத்தல்கள் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், பவ்நிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X