»   »  ‘திருட்டுப் பயலே 2’... டீசரை வெளியிடும் அமலா பால்!

‘திருட்டுப் பயலே 2’... டீசரை வெளியிடும் அமலா பால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவாகிவரும் படம் 'திருட்டுப்பயலே- 2'

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் - சுசிகணேசன் கூட்டணியில் உருவான திருட்டுப் பயலே திரைப்படம் வசூலில் சாதனைப் புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Amala Paul to release Thiruttu Payale 2 teaser

பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடிக்கும் இப்படத்தில் நடிகை அமலாபால் கதாநாயகியாக நடிக்கின்றார்.

இப்படத்தின் முதல் பார்வை டீசரை அமலாபால் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றார்.

English summary
Amala Paul is going to release the teaser of Thiruttu Payale 2.
Please Wait while comments are loading...