இந்த வயசுலயும் அரவிந்த் சாமி எப்படி அழகாக இருக்கிறார் தெரியுமா?: ரகசியத்தை சொன்ன அமலா பால்
Recommended Video

சென்னை: அரவிந்த் சாமி இந்த வயதிலும் அழகாக இருப்பதன் ரகசியத்தை தெரிவித்துள்ளார் அமலா பால்.
சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால், பேபி நைனிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அமலா பால் கூறியதாவது,

பிரார்த்தனை
ஒரு படம் ரிலீஸானால் எனக்காக நன்றாக ஓட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிப்பேன். ஆனால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் முருகன் சாருக்காக சூப்பர் ஹிட்டாக வேண்டும் என நான் வேண்டிக்கிறேன்.

கடின உழைப்பு
தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி முருகன் சார் படத்தின் அனைத்து விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் வேலை செய்தார். சித்திக் சாரின் முதல் படம் வெளியானபோது நான் பிறக்கவில்லை.

கல்லூரி
நான் கல்லூரியில் படித்தபோது அவரின் முதல் படத்தில் வந்த வசனங்களை சொல்லித் தான் ஒருவரையொருவர் கலாய்த்தோம். அந்த அளவுக்கு டிரெண்டி அவர்.

அரவிந்த் சாமி
சித்திக் சார் படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பெரிய கவுரவம். என் டார்லிங் கோ ஸ்டார் அரவிந்த் சாமி சார். நான் அவரை அரவிந்த் சார் என்று எல்லாம் கூப்பிட மாட்டேன். ஸ்வாம் என்று தான் கூப்பிடுவேன்.

சினிமா துறை
சினிமா துறையில் உங்களுக்கு பிடித்தவர் யார் என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் எப்பொழுதுமே கேட்பார்கள். அந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அது அரவிந்த் சார் தான்.

ரகசியம்
அரவிந்த் சார் ஒரு அருமையான மனிதர். அவர் இந்த வயதிலும் அழகாக, பிரைட்டாக இருக்கிறார் என்று அனைவரும் கூறுகிறார்கள். அதற்கு காரணம் அவருடைய நல்ல மனது தான். உள்ளம் அழகாக உள்ள மனிதன் என்றார் அமலா பால்.


Click it and Unblock the Notifications











