அமலா பாலின் ’அதோ அந்த பறவை போல’ எப்போ ரிலீஸ் தெரியுமா?

Recommended Video

Amala paul's news lover photo | அமலா பாலின் ஆண் நண்பர், வைரலாகும் புகைப்படம்!

சென்னை: கே.ஆர். வினோத் இயக்கத்தில் அமலா பால் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் அதோ அந்த பறவை போல.

நயன்தாராவை தொடர்ந்து பல நடிகைகள் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை படம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நிலையில், டிசம்பர் இறுதியில் அமலா பாலின் அதோ அந்த பறவை போல படமும் வெளியாகிறது.

ஆடை

ஆடை

ரத்னகுமார் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ஆடை படத்தில் முழு நிர்வாணமாக நடித்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார் நடிகை அமலா பால். ஆடை படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் நடிகைகளே தயங்கி வருவதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. ஆடை படத்தை தொடர்ந்து அமலாபால் நடித்துள்ள அதோ அந்த பறவை போல ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வித்தியாசமாக உருவாகி உள்ளது.

அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கே.ஆர். வினோத் இயக்கத்தில் அமலா பால், ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் சமீர் கோச்சார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கும் படம் அதோ அந்த பறவை போல, சமீபத்தில் வெளியான படத்தின் டீசர், அமலா பால் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

எப்போ ரிலீஸ்?

அமலா பாலின் அதோ அந்த பறவை போல படம் வரும் டிசம்பர் 27ம் தேதி வெளியாகிறது. ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகை புதன் கிழமை வருவதை முன்னிட்டு, ஒரு வார காலம் படம் ஓட வேண்டும் என்ற மெகா பிளானில், அதோ அந்த பறவை படத்தை டிசம்பர் 27ம் தேதி படக்குழு வெளியிடுகிறது.

வாய்ப்பிருக்கா?

வாய்ப்பிருக்கா?

இயக்குநர் ஏ.எல். விஜய்யை பிரிந்த பிறகு நடிகை அமலா பால், எந்த ஒரு பெரிய ஹீரோவுடனும் இணைந்து நடிக்கவில்லை. ரத்ன குமார் இயக்கத்தில் ஆடை படம் வெளியான பிறகு, விஜய் சேதுபதி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையிலும், அமலா பால் வெளியேற்றப்பட்டார். அதோ அந்த பறவை போல படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் புதிய படங்களும் அமலா பால் கைவசம் இல்லை. மீண்டும் பழையபடி அமலா பால் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை யு சர்டிபிகேட் பெற்றுள்ள அதோ அந்த பறவை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X