வேற மாதிரி போய்க் கொண்டிருக்கும் அமலா பால்: இதுவும் சாத்தியமே
சென்னை: அமலா பால் இமய மலைக்கு சென்று தன்னை அறிந்த பிறகு வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கிறார்.
17 வயதில் நடிக்க வந்தவர் அமலா பால். எடுத்த எடுப்பிலேயே சர்ச்சை கதையில் நடித்து பிரச்சனையில் சிக்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தத் துவங்கினார்.
படிப்படியாக முன்னேறி வந்த நிலையில் காதல், திருமணம், விவாகரத்து என்று அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சென்றது.

விவாகரத்து
காதல் கணவரை பிரிந்தது மிகவும் வேதனையாக இருந்தது. அதை தாங்கவே முடியவில்லை, எங்காவது ஓடிப் போய்விடலாமா என்று தோன்றியது என அமலா பால் தெரிவித்தார். விவாகரத்தாகிவிட்டதே என்று நொந்து கொண்டிருந்த நிலையில் தான் அவர் இமய மலைக்கு பயணம் செய்தார். அந்த பயணம் அவரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

இமயமலை
2016ம் ஆண்டு இமயமலைக்கு சென்ற அமலா பால் தன்னை அறிந்து கொண்டார். தனியாக பயணம் செய்து தன் வாழ்க்கையில் அழகிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். எல்லாமே ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டாராம் அமலா பால். அதன் பிறகே திரையுலகில் புது தெம்புடன் நடிக்கத் துவங்கினாராம்.

புகழ்
நிறைய பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை போய்விட்டதாம். அதனால் தான் ஆசை, ஆசையாய் வாங்கிய மெர்சிடீஸ் பென்ஸ் காரை விற்றுவிட்டாராம் அமலா பால். மாதம் ரூ. 20 ஆயிரம் மட்டுமே செலவு செய்கிறாராம். பியூட்டி பார்லருக்கு செல்வதை நிறுத்திவிட்டாராம். கடைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறாராம். ஒரு முன்னணி நடிகை இந்த அளவுக்கு மாறிவிட்டது ரசிகர்களை வியக்கச் செய்துள்ளது.

தியானம்
யோகா, தியானம், இசை என்று ரிலாக்ஸாக வாழ்வதாக அமலா பால் தெரிவித்துள்ளார். அவர் ஆடை படத்தில் பிறந்தமேனியாக நடித்ததை பார்த்து அது துணிச்சல் என்று கூறி பாராட்டுபவர்கள் பாராட்டினாலும், இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று திட்டுபவர்கள் திட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். தன் காதலரை திருமணம் செய்ய விரும்பும் அமலா பாலுக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஐடியாவுடன் தத்தெடுக்கும் ஆசையும் உள்ளது.

நடிப்பு
அமலா பால் ஏதோ யோகி மாதிரி பேசுகிறார். ஆனால் அவர் பேச்சை நம்ப முடியவில்லை. புதுச்சேரியில் யோகி போன்றும், கேரளாவில் வேறு மாதிரியும் நடந்து கொள்வதாக சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்துள்ளனர். விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டே தான் இருப்பார்கள் என்று அதை எல்லாம் அமலா பால் கண்டுகொள்வது இல்லை.


Click it and Unblock the Notifications











