'நீங்க ஏன் நிம்மதியா வாழ முயற்சிக்கலை..?' பிகினி போட்டோ வெளியிட்டு பிரபல நடிகை கேள்வி!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

கொரோனாவுக்கான விதிக்கப்பட்டுள்ள லாக்டவுன் நடிகர், நடிகைகளை மொத்தமாக சமூக வலைத்தளப் பக்கங்களுக்குத் தள்ளியுள்ளது.

படங்கள் பார்ப்பது, வீட்டு வேலைகள் பார்ப்பது உள்ளிட்ட விஷயங்களை அடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவது அவர்களின் பொழுதுபோக்காக மாறியிருக்கிறது.

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால்

இதற்கு முன் ட்விட்டரில் கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போது இன்ஸ்டாகிராமில் தங்கள் முழு நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர். அப்படி அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்யும் நடிகைகளில் ஒருவர் அமலா பால். தினமும் ஒன்றிரண்டு புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். லாக்டவுனால் கேரளாவில் இருக்கும் அமலா பாலில் தற்போதைய ஒரே டைம்பாஸாக இது இருக்கிறது.

காதல் மொழிகளை

காதல் மொழிகளை

ஆற்றுத் தண்ணீரில் மிதந்தபடி நேற்று அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. அந்த போட்டோ ஏராளமான லைக்ஸ்களையும் அள்ளியது. 'இனிய காதல் மொழிகளை, தண்ணீர் என் காதுகளில் கிசுகிசுத்தது' என்று அதற்கு கேப்ஷன் கொடுத்திருந்தார் அமலா பால். இதற்கு மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன், இது அருமையான போட்டோ என்று பாராட்டி இருந்தார்.

முயற்சிக்கவில்லை

முயற்சிக்கவில்லை

இந்நிலையில் அதற்குள் இன்னொரு போட்டோவை பதிவிட்டுள்ளார். பிகினி புகைப்படமான இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளித் தெளித்துள்ளனர். ஏராளமான கமென்ட்களையும் பதிவிட்டுள்ளனர். இதற்கு கேப்ஷனாக, சிலர் தங்கள் வாழ்க்கையை, நிம்மதியாக ஓய்வெடுக்கும் ஒரே நோக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நீங்கள் ஏன் நிம்மதியாக வாழ முயற்சிக்கவில்லை? உலகத்தால் இப்போது சிலவற்றை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

சாக்லேட் மாதிரி

சாக்லேட் மாதிரி

இதற்கு பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒருவர், நிம்மதி என்பது வாழும் வாழ்க்கையில்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த போட்டோவுல அப்படியே சாக்லேட் மாதிரி பிரெஷ்சா இருக்கீங்க என்று ஒருவரும் இன்னொருவர், இங்கதான் கொரோனாவுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கீங்களா? என்றும் கேட்டுள்ளனர்.

அனுபவிக்க முடியாது

அனுபவிக்க முடியாது

உங்களை மாதிரி வாழ்க்கையை, மத்தவங்களால அனுபவிக்க முடியாது, என்ஜாய் என்று ஒரு நெட்டிசன் தெரிவித்துள்ளார். உங்களுக்கு உங்க உடலை காண்பிக்கணும்னா தாராளமாக காண்பிங்க. ஆனா, இப்படி உட்கார்ந்து போஸ் கொடுக்கிற போட்டோவை போடாதீங்க' என்று ஒருவர் கலாய்த்துள்ளார். ராட்சசன் படத்துல சூப்பரா நடிச்சிருந்தீங்க என்று ஒருவர் பாராட்டியுள்ளார்.

ஆடுஜீவிதம்

ஆடுஜீவிதம்

தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், அமலா பால். ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது, அதோ அந்த பறவை போல, மலையாளத்தில் ஆடுஜீவிதம் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X