‘ஒரு இந்தியன் பிரயணக்கதா’ மூலம் நடிகராகிறார் அமலாபாலின் அண்ணன் அபிஜித் பால்!

திருவனந்தபுரம்: நடிகை அமலாபாலின் அண்ணனான அபிஜித் பால் மலையாளப் படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால், சமீபத்தில் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட நடிப்பிற்கு ஓய்வு கொடுத்து விட்டார்.

இந்நிலையில் அமலாபாலின் அண்ணன் அபிஜித் பால் நடிகராகிறார். அமலாபால் நாயகியாக நடித்த 'ஒரு இந்தியன் பிரயணக்கதா' படத்தில் சிறிய வேடமொன்றில் நடித்துள்ள அபிஜித், அதனைத் தொடர்ந்து மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் இளம் துப்பறிவாளனாக நடிக்க உள்ளாராம்.

தனது திரையுலக பிரவேசம் குறித்து அபிஜித்பால் கூறுகையில் :-

சிறிய கேரக்டர்...

சிறிய கேரக்டர்...

சினிமாவில் நடிக்க துளியும் ஆசை இன்றி இருந்தேன். இயக்குனர் சத்தியன் அந்திக்காட் ஒரு இந்தியன் பிரயணக்கதா படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்க வைத்தார். அப்போதும் அதை ஒரு ஜாலியாகத்தான் எடுத்துக் கொண்டேன்.

விக்ரம்...

விக்ரம்...

தெய்வதிருமகள் படத்தில் அமலா நடிக்கும்போது விக்ரம் சார்தான், ‘நீ சினிமாவில் நடி, பெரிய ஆளாக வருவாய்' என்று ஆசையை தூண்டிவிட்டார்.

நடிக்க ஆசை...

நடிக்க ஆசை...

என்றாலும் அப்போது நான் வேலையிலும், படிப்பிலும் பிசியாக இருந்ததால் அதுபற்றி யோசிக்கவில்லை. இப்போது நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. அதனால் நடிக்க வந்துவிட்டேன்.

அதுவும் சஸ்பென்ஸ் தான்...

அதுவும் சஸ்பென்ஸ் தான்...

படம் பற்றியும் என்னுடைய கேரக்டர் பற்றியும் நான் சொன்னால் முறையாக இருக்காது. அதனை தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிக்கும்' என தெரிவித்துள்ளார் அபிஜித்பால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X