»   »  அமலா பால் தம்பியை ஹீரோவாக்கும் விஜய்

அமலா பால் தம்பியை ஹீரோவாக்கும் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலா பாலின் தம்பி அபிஜித் பால் ஹீரோவாகியுள்ளார்.

அமலா பால் தற்போது தமிழ், மலையாள படங்களில் பிசியாக உள்ளார். நடிப்பது தவிர பாடவும் செய்கிறார். அவர் கன்னடத்தில் நடித்த ஹெப்புலி படம் ஹிட்டாகியுள்ளது.

அமலா பாலின் சினிமா வாழ்க்கை சூப்பராக பிக்கப்பாகி சென்று கொண்டிருக்கிறது.

தம்பி

தம்பி

அமலா பாலின் தம்பி அபிஜித் பால் ஹீரோவாகிறார். விஜய் ஸ்ரீ இயக்கும் புதிய ஹாரர் படத்தின் மூலம் அபிஜித் ஹீரோவாகிறார். இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் எடுக்கப்படுகிறது.

விஜய் ஸ்ரீ

விஜய் ஸ்ரீ

விஜய் ஸ்ரீ தற்போது சாருஹாஸன், ஜனகராஜ் உள்ளிட்டோரை வைத்து கேங்ஸ்டர் படத்தை எடுத்து வருகிறார். இதையடுத்து அவர் அபிஜித்தை வைத்து படம் எடுக்கிறார்.

சிம்லா

சிம்லா

அபிஜித்தை வைத்து எடுக்கும் படம் சிம்லாவில் படமாக்கப்படுகிறது. இதை தமிழ், இந்தி முடிந்தால் மலையாளத்திலும் எடுக்க திட்டமிட்டுள்ளோம். இதை 3டியில் எடுக்கிறோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

பாடல்கள்

பாடல்கள்

அபிஜித் நடிக்கும் ஹாரர் படத்தில் பாடல்கள் கிடையாது, இடைவேளையும் கிடையாது. படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்குகிறது என விஜய் கூறியுள்ளார்.

தேவி

தேவி

அபிஜித் முன்னதாக ஏ.எல். விஜய் இயக்கிய தேவி படத்தில் தயாரிப்பாளரின் மகனாக நடித்திருந்தார். இந்நிலையில் அவர் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Amala Paul's brother Abhijith Paul is set to become hero in Vijay Sri's upcoming untitled horror movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil