‘கடாவர்’ 4 ஆண்டு கடினமான பணி..மார்ச்சுவரி டெக்னிஷ்யனாக நடிக்க கடுமையான ஹோம்வர்க் செய்தோம்..அமலாபால்!
சென்னை : நடிகை அமலாபால் தடயவியல் நிபுணராக நடித்துள்ள படம் கடாவர். இந்தப் படத்தின்மூலம் அவர் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
கடாவர் படம் வரும் 12ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

நடிகை அமலா பால்
அமலா பால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகவுள்ள படம் கடாவர். வரும் 12ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்தப் படம் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. அறிமுக இயக்குநர் அனூப் எஸ் பணிக்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் அமலா பாலுடன் ஹரீஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தடயவியல் நிபுணர்
இந்தப் படத்தில் அமலாபால் போலீஸ் துறையை சேர்ந்த தடயவியல் நிபுணராக நடித்துள்ளார். அபிலாஷ் பிள்ளை இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் அனூப், கடந்த 2016ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியதாக தெரிவித்தார்.

கடவுளாக காட்சி தந்த அமலா பால்
உரிய தயாரிப்பாளர் கிடைக்காமல் சோர்வடைந்தபோது, அமலா பாலை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் கதையை கேட்டவுடன் நடிக்க அவர் சம்மதித்ததாகவும் உடனடியாக தயாரிக்கவும் ஒப்புக் கொண்டதாகவும் அனூப் உற்சாகம் தெரிவித்தார். அந்த கணம் முதல் அவர் தங்களுக்கு கடவுளாக காட்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

4 ஆண்டுகள் சிரமம்
கடந்த 2018ல் இந்தப் படத்திற்கான பணிகளை தொடங்கிய நிலையில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் சூட்டிங் பாதிக்கப்பட்டதாகவும், பட வெளியீட்டின்போதும் அதிகமான சிரமங்களை சந்தித்ததாகவும் தற்போது 4 ஆண்டுகள் சிரமத்திற்கு பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தற்போது படத்தை பிரம்மாண்டமாக வெளியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுமையான கேரக்டர்
இதையடுத்து பேசிய அமலா பால், இந்தப் படத்தில் தன்னுடைய கேரக்டர் புதுமையானதாகவும் வலிமையானதாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், தொடர்ந்து அவர்கள் தயாரிப்பாளர் கிடைக்காமல் கஷ்டப்பட்டதை பார்த்து தயாரிப்பாளராகவும் பணியாற்ற சம்மதம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

ரிலீசில் தடைகள்
நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு பிறகு இந்தப் படத்தின் பணிகளை நிறைவு செய்ததாகவும், படத்தின் வெளியீட்டின்போது பல தடைகளை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தடயவியல் துறையில் இதுவரை அதிகமான படங்கள் வெளியாகாத நிலையில் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயமாக கவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

ஓடிடியில் ரிலீஸ்
இன்னும் சில தினங்களில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கடாவர் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் தலைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தடயவியலை மையமாக கொண்டு வெளியாகவுள்ள இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











